Rekha jhunjhunwala portfolio: பங்கு சந்தை கடந்த சில தினங்களாகவே ஏற்றத்தினை சந்தித்து வருகின்றது. குறிப்பாக கடந்த சில அமர்வுகளாக சர்வதேச சந்தையானது, ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இந்திய சந்தையில் லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் பங்குகள் வலுவான வளர்ச்சியினைக் கண்டுள்ளன.
இந்த ஏற்றமானது இப்படியே தொடருமா? தொடர்ந்து அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரித்து வரும் நிலையில், பங்கு சந்தையில் ஏற்றம் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
1 மாதத்தில் ரூ.650 கோடி
குறிப்பாக அமெரிக்காவில் வட்டி அதிகரிக்கும்போது அது அன்னிய முதலீடுகள் வெளியேற வழிவகுக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
எனினும் மெட்ரோ பிராண்ட்ஸ் மற்றும் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பங்கின் விலை எப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இப்பங்குகள் ஏற்றம் கண்டுள்ள நிலையில், நிகரமதிப்பு 650 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
ரேகா ஜுன்ஜுன்வாலா வசம்
டிசம்பர் 2021ல் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் பங்குகள் நல்ல வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் இந்த நிறுவனத்தில் 10,07,53,935 பங்குகள் அல்லது 17.50% பங்குகள் உள்ளன. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவுக்கு பிறகு இந்த பங்குகள் முழுமையும் ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் வந்தது. இது முன்னதாக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் இருந்தது.
மெட்ரோ பிராண்ட்ஸ்
டிசம்பர் 2022 காலாண்டில் மெட்ரோ பிராண்டில் ரேகா ஜுன்ஜுன்வாலா வசம், 3,91,53,600 பங்குகள் இருந்தன. ரேகா ஜுன்ஜுன்வாலாவின் கணவர் ஐபிஓ-வுக்கு முன்னதாகவே கணிசமான பங்குகளை வைத்திருந்தனர். ஆக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவுக்கு பிறகு, இந்த பங்குகள் ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் வந்துள்ளது.
ரேகா ஜுன்ஜுன்வாலா நெட்வொர்த்
கடந்த ஒரு மாதத்தில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 530.95 ரூபாயில் இருந்து, 578.05 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் மட்டும் இப்பங்கின் விலை ஒரு பங்குக்கு 47.10 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலாவின் வசம் 10,07,53,935 பங்குகள் உள்ளன. இந்த பங்கின் விலை ஏற்றம் காரணமாக ரேகா ஜுன்ஜுன்வாலாவின் நெட்வொர்த் மதிப்பானது 475 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
மெட்ரோ பிராண்ட் நெட்வொர்த்
இதே கடந்த ஒரு மாதத்தில் மெட்ரோ பிராண்ட் பங்கு விலையானது, 45.70 ரூபாய் ஒரு பங்குக்கு அதிகரித்துள்ளது. இதே ரேகா ஜுன்ஜுன்வாலாவின் வசம் 3,91,53,600 பங்குகள் உள்ளது. இதன் மூலம் மெட்ரோ பிராண்டின் பங்கு விலையானது அதிகரித்துள்ள நிலையில், இதன் மூலம் சுமார் 179 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. ஆக கடந்த 1 மாதத்தில் இவ்விரு பங்குகளில் ரேகாவின் நெட்வொர்த் 650 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications