ரேகா ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள டாடா குழும பங்குகளான டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்கள் வலுவான பையிங்கினை கண்டுள்ளன.
இதன் காரணமாக டைட்டன் நிறுவனம் மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகள் வலுவான ஆர்வத்தினை கண்டுள்ளன. இன்று சந்தை தொடங்கிய 15 நிமிடங்களுக்குள் டைட்டன் பங்கின் விலை இன்று 2598.70 ரூபாயாக உள்ளது.
இப்பங்கானது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் 50.25 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த அமர்வின் முடிவு விலை 2548.70 ரூபாயாகும்.

இதே டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது 470.40 ரூபாயாக உச்சம் எட்டியுள்ளது. இப்பங்கானது சந்தை தொடங்கிய 15 நிமிடங்களுக்குள் நல்ல ஏற்றத்தினை கண்டது. குறிப்பாக 15 நிமிடங்களுக்குள் ஒரு பங்குக்கு 32.75 ரூபாய் லாபமாக கிடைத்தது.
டாடா குழுமத்தினை சேர்ந்த இரு பங்குகளால் வெறும் 15 நிமிடத்தில் ரேகா ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோ மதிப்பானது சுமார் 400 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒவ்வொன்றும் 32.75 ரூபாயாகவும் இருந்தது.
டைட்டன்: டைட்டன் நிறுவனத்தில் ரேகா ஜுன் ஜுன்வாலா வசம் டிசம்பர் 2022 காலாண்டு நிலவரப்படி, 4,58,95,970 பங்குகள் உள்ளன. இது 5.17% ஆகும். இப்பங்கானது இன்று தொடக்கத்தில் வெறும் 15 நிமிடத்தில் 50.25 ரூபாய் ஏற்றம் கண்ட நிலையில், 50*4,58,95,970= 230 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்: இதே டாடா மோட்டார்ஸ் பங்கின் விலையானது 32.75 ரூபாயாகவும், முதல் 15 நிமிடங்களில் இப்பங்கானது 32.75 ரூபாயாக ஏற்றம் கண்டது. இந்த நிலையில் டிசம்பர் 2022 காலாண்டு நிலவரப்படி, 5,22,56,000 பங்குகள் ரேகா ஜுன் ஜுன்வாலா வசம் இருந்தது. இதன் மூலம் 5,22,56,000*32.75= 170 கோடி ரூபாயாக மதிப்பு அதிகரித்துள்ளது.

ரேகா ஜுன் ஜுன்வாலா நெட்வொர்த்: ரேகா ஜுன் ஜுன்வாலா நெட்வொர்த் ரூபாய் அடிப்படையில் டைட்டன் நிறுவனத்தில் 230 கோடி ரூபாயும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 170 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 15 நிமிடத்தில், ரேகா ஜுன் ஜுன்வாலா வசம் 400 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications