இந்திய பங்கு சந்தையின் Big Bull ஆக போற்றப்பட்ட ரகேஷ் ஜுன்ஜூன்வாலா மறைந்த பின்பு அவருடைய மெகா போர்ட்போலியோ-வை அவருடைய மனைவி ரேகா ஜுன்ஜூன்வாலா கவனித்து வருகிறார். ரகேஷ் ஜுன்ஜூன்வாலா உருவாக்கிய Rare Enterprises பெயரில் தான் இக்குடும்பத்தின் மொத்த பங்குச்சந்தை முதலீடுகளும் வருகிறது. பங்குச்சந்தை முதலீட்டின் வாயிலாக பெரும் பணத்தை சேர்த்த ஜுன்ஜூன்வாலா குடும்பம் தற்போது ரியல் எஸ்டேட் துறைக்கு மாறுகிறது.
ரேகா ஜுன்ஜூன்வாலா தனது குடும்பத்தின் முதலீட்டுப் பாதையை புதிய திசையில் திருப்பியுள்ளார். பங்கு சந்தையில் தனது கணவரின் வழியை பின்பற்றி கடந்த சில வருடங்களாகத் தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலும், சந்தையின் ரிஸ்க்குகளை சமாளிக்கவும், முதலீட்டு முடிவுகளில் ஏற்படும் தோல்விகளை சமாளிக்கும் வகையிலும் ஒரு பேக்அப் திட்டமாக ரேகா ஜுன்ஜூன்வாலா இப்போது ரியல் எஸ்டேட் துறையை நோக்கி திரும்பியுள்ளார்.

ரகேஷ் ஜுன்ஜூன்வாலா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இக்குடும்பம் அதன் முதலீட்டு உத்தியை பன்முகப்படுத்தியுள்ளது. இக்காலகட்டத்தில் ரேகா Rare Enterprises வாயிலாக சுமார் ரூ.1,000 கோடிக்கு மேலாக ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார். மும்பை குர்லா காம்பெக்ஸ் மற்றும் சாந்திவாலி போன்ற முக்கியமான இடங்களில் அலுவலக இடங்கள் மற்றும் வால்கேஷ்வர் போன்ற உயர்தர குடியிருப்பு பகுதிகளில் நிலத்தை வாங்கியுள்ளார்.
ரியல் எஸ்டேட் துறையில் 1000 கோடி முதலீடு செய்திருந்தாலும் ஜுன்ஜூன்வாலா குடும்பத்தின் முதலீட்டு நிறுவனமான ரேர் என்டர்பிரைசஸ் லிமிடெட், இன்னும் பங்கு சந்தையில் அதிகப்படியான முதலீடு செய்து வருகிறது. ரேர் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த சொத்துக்களில் 99% க்கும் அதிகமானவை பங்குச்சந்தை முதலீட்டில் உள்ளன. ஆனால், ரியல் எஸ்டேட் போர்ட்போலியோவை கூடுதலாகச் சேர்த்துள்ளது.
ரகேஷ் ஜுன்ஜூன்வாலா உயிருடன் இருக்கும் போது பல ரியல் எஸ்டேட் முதலீடுகளை செய்துள்ளார். தற்போது ஜுன்ஜூன்வாலா குடும்பம் வசிக்கும் மலபார் ஹில் வீட்டு அப்படி செய்யப்பட்ட முதலீடுகள் தான். முதலீல் இது அப்பார்ட்மென்ட் ஆக இருந்தது, பின்னாளில் ஜுன்ஜூன்வாலா இதை மாற்றி தனது குடும்பத்திற்கான வீடாக மாற்றினார்.
ராகேஷ் ஜுன்ஜூன்வாலா-வின் பங்குச்சந்தை முதலீட்டில் அவருக்கு நீண்ட காலமாக அதிகப்படியான லாபத்தை கொடுத்த பங்குகள் என்றால் இது க்ரிசில் மற்றும் டைட்டன் பங்குகள் தான். இதனாலேயே ராகேஷ் ஜுன்ஜூன்வாலா டாடா குழுமத்தை எப்போது புகழ்ந்து தள்ளும் வழக்கத்தை கொண்டிருந்தார்.
ரேகா ஜுன்ஜூன்வாலா பங்குச்சந்தையில் இருந்து ரயில் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் முடிவை நீங்க எப்படி பார்க்குறீங்க. உங்க கருத்த கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications