ரேகா ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவில் தொடர்ந்து பல்வேறு முக்கிய பங்குகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து இந்திய சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகளவில் இருந்து வரும் நிலையில், இதுவும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் லாபகரமாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல முதலீட்டாளரான ரேகா ஜுன் ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள டைட்டன் நிறுவனத்தின் பங்கு விலையானது 6.30% ஏற்றத்தில் அல்லது 150.90 ரூபாய் ஏற்றத்தில் காணப்படுகிறது. இதில் 992 கோடி ரூபாயாக முதலீடானது அதிகரித்துள்ளது.
டாடா குழுமத்தினை சேர்ந்த எல்ஐசி பின்னணியில் உள்ள இந்த நிறுவனத்தில் 5.17% அல்லது 4,58,95,970 பங்குகள் ரேகா வசம் உள்ளன.
மேலே கூறியது போல, டைட்டன் நிறுவன பங்கின் விலையானது 2397.10 ரூபாயில் இருந்து, 2548 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. ஒரு பங்குக்கு 150.90 ரூபாய் எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. கடந்த அக்டோபர் - டிசம்பர் 2022 காலாண்டு நிலவரப்படி, இப்பங்கினில் ரேகா ஜுன் ஜுன்வாலா வசம் 4,58,95,970 பங்குகள் இருந்தன.
இந்த விலையேற்றத்தின் மத்தியில் தான் இப்பங்கின் நிகர மதிப்பானது 692 கோடி ரூபாய் அல்லது 6,92,57,01,873 கோடி ரூபாயாக கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் தான் ரேகா ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோ லாபம் கண்டுள்ளது.

எல்ஐசி பின்னணியில் உள்ளதா?
கடந்த 2023ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் டைட்டன் நிறுவனம் லிமிடெட் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டிங் அறிக்கையின் படி, லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC) டாடா குழுமத்தில் முதலீடு செய்துள்ளது. மூன்றாவது காலாண்டில் எல்ஐசி நிறுவனத்தின் வசம் 2,05,19,699 டைட்டன் பங்கானது உள்ளது. இது டாடா குழுமத்தில் 2.31% பங்காகும். இதே 2வது காலாண்டில் எல்ஐசி வசம் 2,89,63,596 டைட்டன் நிறுவன பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது, இது மொத்த நிறுவன பங்கில் 3.26% பங்காகும்.
எஸ்பிஐ நிஃப்டி 50 இடிஎஃப் நிறுவனம் டைட்டனில் 1,40,05,693 பங்குகள் அல்லது 1.58% பங்குகளை வைத்திருந்தது.


Click it and Unblock the Notifications