பங்கு சந்தை முதலீடுகளில் இந்தியாவில் பிரபலமான முதலீட்டாளர்களில் ஒருவர் மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இவர் இந்தியாவின் வாரன் பபெட் என பாசமான அழைக்கப்பட்டவர். தற்போது ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா பங்கு சந்தை வணிகத்தில் முதலீட்டினை தொடர்ந்து வருகின்றார்.
பெரும்பாலும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவில் உள்ள முதலீடுகள் கவனம் பெற்றதாக இருக்கும். அந்த வகையில் தற்போது ரேகா ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்யும் பங்குகளும், முதலீட்டாளர்களால் கவனிக்கப்பட்டு வருகின்றன.
விலை அதிகரிக்கலாம்
அந்த வகையில் புதன் கிழமை அமர்வில் ஒரு பங்குக்கு அதிகபட்சமாக 4% அதிகமாக உயர்ந்து 134 ரூபாயாக அதிகரித்துள்ள பெடரல் வங்கி, கிட்டதட்ட அதன் 52 வார உச்ச விலையில் காணப்படுகின்றது. இது கடந்த ஜனவரி மாதட்தில் 143 ரூபாயினை உச்சத்தினை எட்டியது. இது தற்போது உச்சத்தின் அருகில் இருந்தாலும்., இப்பங்கின் விலையானது மேற்கோண்டு அதிகரிக்கலாம் என தரகு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
வாங்கலாம் என பரிந்துரை
வங்கி பங்கான இது தொடர்ந்து ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என நுவாமா ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் இலக்கு விலையினை 180 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த வங்கியானது இனி வரும் ஆண்டுகளில் அதன் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் தரகு நிறுவனங்கள் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளன.
வளர்ச்சி அதிகரிக்கலாம்
தொடர்ந்து வங்கியின் கடன் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், நிதி நிலையும் சிறப்பாக இருந்து வருகின்றது. இதற்கிடையில் இதன் EPS CAGR விகிதம் என்பது FY22 - 25E ல் 28% மேலாக வளர்ச்சி காணலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது. ஆக இது மேற்கோண்டு வளர்ச்சி விகிதத்தினை ஊக்குவிக்கலாம்.
சொத்தின் தரம் மேன்மை
வங்கித் துறையை சேர்ந்த இந்த மிட்கேப் வங்கி தொடர்ந்து சர்பிளஸ் வைத்துள்ளது. இது ஒரு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும் இவ்வங்கியின் சொத்தின் தரமும் மேம்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து இதுவும் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கபடுகிறது. இதன் வட்டி வருவாயும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இவ்வங்கியில் NRI டெபாசிட் விகிதமும் உயர்ந்து வருகின்றது. ஆக இதுவும் இதன் வளர்ச்சிக்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது.
ரேகா ஜுன் ஜுன்வாலா வசம்
பி.எஸ்.இ-யின் தரவின் படி, மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் 1.17% பங்குகள் இருந்தது. இதே ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் 2.31% பங்கும் டிசம்பர் 2022 நிலவரப்படி இருந்தது.
இன்றைய நிலவரம் என்ன?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 4.03% அதிகரித்து, 134.35 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 134.75 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 129.15 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 4.11% அதிகரித்து, 134.40 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 134.75 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 129.45 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 143.35 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 82.50 ரூபாயாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications