இந்திய பங்குச்சந்தையின் முன்னணி முதலீட்டாளர் ரேகா ஜுன்ஜுன்வாலா. பிரபல முதலீட்டு ஜாம்பவான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி இவர். அவரது மறைவுக்கு பிறகு மிக திறமையாக முதலீட்டு போர்ட்ஃபோலியோவை மேலாண்மை செய்து வருகிறது.
செப்டம்பர் 29 நிலவரப்படி ரேகா ஜுன்ஜுன்வாலா போர்ட்ஃபோலியோ மதிப்பு, 1.12 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (Q2FY27 - ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டம்) ஒரே ஒரு குறிப்பிட்ட பங்கின் விலை உயர்வு மூலம் இவர் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லாபம் ஈட்டியுள்ளார்.

டாடா குழுமத்துக்கு சொந்தமான புகழ்பெற்ற டைட்டன் பங்குகள்தான் ரேகா ஜுன்ஜுன்வாலாவின் சொத்து மதிப்பை இந்த காலாண்டில் ஜெட் வேகத்தில் உயர்த்தியுள்ளன. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவடைந்தபோது ரேகா ஜுன்ஜுன்வாலா தனது இரண்டு கணக்குகள் மூலம் மொத்தம் 4,71,84,470 டைட்டன் பங்குகளை வைத்துள்ளார்.
கடந்த ஜூன் 30 அன்று டைட்டன் பங்கு ஒன்றின் விலை 4,405.30 ரூபாயாக இருந்தது. இதன் மூலம் இவருக்கு சொந்தமான பங்குகளின் மொத்த மதிப்பு 20,786.2 கோடி ரூபாயாக இருந்தது.இந்த இரண்டாவது காலாண்டில் அவர் தனது பங்குகளை விற்றாரா அல்லது கூடுதலாக வாங்கினாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் தற்போதைய நிலவரப்படி வெளிவரவில்லை. இருப்பினும், அவர் தனது பங்குகளை எதையும் விற்காமல் அப்படியே வைத்திருப்பதாக கொண்டால், செப்டம்பர் 29 அன்று மும்பை பங்குச்சந்தையில் டைட்டன் பங்கு விலை 4,684 ரூபாயாக இருந்தது, எனவே அவரது பங்குகளின் மொத்த மதிப்பு 22,101.2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், நடப்பு காலாண்டில் மட்டும் ரேகா ஜுன்ஜுன்வாலா சொத்து மதிப்பில் கூடுதலாக 1,315 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. நடப்பு காலாண்டில் மட்டும் டைட்டன் பங்குகள் 6% வரை உயர்ந்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இப்பங்குகள் சுமார் 16% லாபத்தை தந்துள்ளன.
இதற்கிடையே Ventura நிறுவனத்தின் வினித் அளித்துள்ள பேட்டியில், இந்த பங்கிற்கு Hold என்ற பரிந்துரையை வழங்குகிறார். இதன் இலக்கு விலையாக 5,343 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. டைட்டன் நிறுவனம் நீண்ட கால அடிப்படையில் மிகவும் வலிமையான நகை வணிகத்தை கொண்டுள்ளது. 2030-க்குள் வருவாயை இரு மடங்காக உயர்த்தவும், 1,400 கடைகளை திறக்கவும் திட்டமிட்டுள்ளது என்பதால் நல்ல வளர்ச்சி இருக்கும் என கூறுகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications


