1 பங்குக்கு 1 பங்கு இலவசம்.. பதிவு தேதி அறிவித்த ரிலையன்ஸ்.. பங்குகள் உயர்வு..!!

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஒரு லார்ஜ்கேப் வகையை சேர்ந்த பங்குகளாகும். இது அதன் முதலீட்டாளர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தற்போது அதற்கான பதிவு தேதியையும் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, சமீபத்தில் கூடி அதன் முதலீட்டாளர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்தது. அதாவது இந்த பதிவு தேதியின்போது நிறுவனத்தின் 1 பங்கை வைத்திருப்பவர் கூடுதல் ஈக்விட்டி பங்கைப் போனஸாகப் பெறுவார்கள். இருப்பினும், இந்த போனஸ் பங்குகளை வெளியிடுவதற்கான சமீபத்திய பதிவு தேதி அக்டோபர் 28 என நிறுவனம் அறிவித்துள்ளது. மறுபுறம், நிறுவனத்தின் பங்கு அதன் முதலீட்டாளர்களுக்கு கடந்த ஒரு வருடத்தில் 15 சதவீத லாபத்தை மட்டுமே அளித்துள்ளது.

1 பங்குக்கு 1 பங்கு இலவசம்.. பதிவு தேதி அறிவித்த ரிலையன்ஸ்.. பங்குகள் உயர்வு..!!

1:1 போனஸ் வெளியீடு என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தின் 35 லட்சம் பங்குதாரர்கள் ஏற்கனவே இருக்கும் ஒவ்வொரு பங்கிற்கும் 1 இலவசப் பங்கைப் பெறுவார்கள். உதாரணமாக, நீங்கள் 1,000 ரிலையன்ஸ் பங்குகளை வைத்திருந்தால், இதன்மூலம் நீங்கள் 2,000 பங்குகளாகும் என்று அர்த்தம். இந்த போனஸ் பங்குகள் முதலீட்டு மதிப்பில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

நிறுவனத்தின் பரிவர்த்தனை தாக்கல் படி, நிறுவனத்தின் சமீபத்திய இயக்குநர்கள் கூட்டம் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. அதாவது நிறுவனத்தின் பதிவு தேதியின்படி முதலீட்டாளர்கள் டிமேட் கணக்கில் 10 முக மதிப்பு கொண்ட ரூ.1 ஈக்விட்டி பங்கின் கூடுதல் ரூ. 10 முகமதிப்பு கொண்ட மேலும் ஒரு போனஸ் ஈக்விட்டி பங்கை வெளியிட நிறுவனத்தின் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சமீபத்தில், இந்த போனஸ் பங்குகளை வெளியிடுவதற்கு தகுதியான பங்குதாரர்களை நிர்ணயம் செய்ய நிறுவனத்தின் பதிவு தேதி அக்டோபர் 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனஸ் பங்குகளை வெளியிட ரூ. 6766.23 கோடி நிறுவனத்திற்கு தேவைப்படும். இந்த போனஸ் பங்கு வெளியீடு, நிறுவனத்தின் வரலாற்றில் 6வது முறையாகும். மேலும், 2017-க்குப் பிறகு முதல் முறையாக, போனஸ் பங்குகளுக்கு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

மறுபுறம், முன்னணி தரகு நிறுவனமான ஜேஎம் பைனான்சியல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளுக்கு வாங்குதல் மதிப்பீட்டுடன் இலக்கு விலையை வழங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்த நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு ரூ. 3265 இலக்கு விலை பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

ஸ்டாக் அவுட் லுக்:கடந்த வர்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை 0.8 சதவீதம் அதிகரித்து ரூ. 2709.40 இல் நிறைவடைந்தது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 3217.60 ஆகவும், 52 வாரக் குறைந்த அளவான ரூ. 2220.30. கடந்த வாரத்தில் பங்கு விலை சுமார் 1 சதவீதத்தை இழந்துள்ளது, கடந்த மாதத்தில் பங்கு சுமார் 8 சதவீதத்தை இழந்துள்ளது, இதேபோல், கடந்த ஆறு மாதங்களில் பங்கு சுமார் 7 சதவீதமும், கடந்த ஆண்டில் 15 சதவீதமும், 93 கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு சதவீதம் லாபம் அதன் பங்குதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 18,32,000 கோடியாக உள்ளது.

நிறுவனம் கடந்த 1980 ஆம் ஆண்டில் 3:5 போனஸ் மற்றும் 1983 இல் 6:10 போனஸ் வெளியீட்டில் தொடங்கி 5 முறை போனஸ் பங்குகளை வழங்கியுள்ளது. அதேபோல், கடந்த 1997ம் ஆண்டு 2009ம் ஆண்டும் மற்றும் 2017ம் ஆண்டு மற்றும் தற்போது 2024ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் போனஸ் வெளியீடுகள் 1:1 என்ற விகிதத்தில் இருந்தன.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+