மும்பை: இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சமீபத்திய நாட்களாக கடும் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றன. எனினும் இந்த காலகட்டத்திலும் சில பங்குகளை வாங்க தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், அதன் தாக்கம் என்பது இந்திய சந்தையில் இருந்து வருகின்றது.
தொடர்ந்து இந்திய சந்தையானது ஏற்ற இறக்கத்தினை கண்டாலும், வலுவாக காணப்படும் நிலையில், அன்னிய முதலீடுகளின் வரத்து என்பது அதிகமாக இருந்து வருகின்றது.
வட்டி அதிகரிக்கலாம்
இது வரவிருக்கும் நாட்களிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இதற்கிடையில் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வரவிருக்கும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில், வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்செக்ஸ் நிலவரம் என்ன?
சென்செக்ஸ் குறியீடானது கடந்த மார்ச் 2023 வரையிலான 12 மாதங்களில் 0.7% ஆக ஏற்றம் கண்டுள்ளது. எனினும் பி எஸ் இ மிட் கேப் மற்றும் பி எஸ் இ ஸ்மால் கேப் குறியீடானது 0.2 சதவீதம் மற்றும் 4.5% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளன. இதே காலகட்டத்தில் பி எஸ் இ 500 இன்டெக்ஸ் ஆனது 2.30 சதவீதம் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
அடையாளம் காணப்படலாம்
எனினும் வலுவான ஏற்றத்தின் மத்தியில் முதலீட்டாளர்கள் இன்னும் நல்ல திறன் கொண்ட பங்குகளை வாங்க அடையாளம் காணலாம். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் நல்ல வருமானத்தை ஈட்ட ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கலாம்.
சமீபத்திய மாதங்களில் கிராமப்புற ஊதியங்கள் வலுவாக காணப்படுகின்றன. இது கிராமப்புற தேவையை ஊக்குவிக்கலாம். எனினும் மழைப்பொழிவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதாற்கிடையில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 5.6% ஆக இருக்கலாம் எனவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது. மொத்தத்தில் இதுவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
என்னென்ன பங்குகள்?
இதற்கிடையில் கோடக் இன்ஸ்டிடியூசனல் தரகு நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் 20% மேலாக ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.
இதே பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையானது 10.5% ஏற்றத்திலும், கியூமின்ஸ் இந்தியா பங்கு விலையானது 11.1%, இன்ஃபோசிஸ் விலை 19.1% ஆகவும், சன் பார்மா பங்கு 16%மும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற பங்குகள்?
ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கு விலையானது இலக்கு விலையாக 3564 ரூபாயாகவும், இது தற்போதைய சந்தை விலையில் இருந்து 28% ஏற்றம் காணலாம். கிரெடிட் அக்சஸ் கிராமீனில் 40% ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது. இதன் இலக்கு விலையாக 1290 ரூபாயாகவும்,
கோத்ரேஜ் கன்சியூமர், ஹெச் டி எஃப் சி வங்கி, டாடா கன்சியூமர், ரோஸாரி பயோடெக் உள்ளிட்ட பங்குகள் 15%, 21.70% மற்றும் 34.5% மற்றும் 24% எனும் அளவுக்கு ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications