சமீபத்தில் தான் இந்திய பங்குச் சந்தைகளில் எந்த ஒரு நிறுவனமும் செய்யாத இமாலய சாதனையைச் செய்தது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்டது தான் இந்த இமாலய சாதனை. முகேஷ் அம்பானியின் ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டிசிஎஸ் நிறுவனம் தான் இருக்கிறது. ஆனால் அதுவும் சுமாராக 2 லட்சம் கோடி ரூபாய் பின் தங்கி, ஏறக் குறைய 8 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுக் கொண்டு இருந்தது.

இப்போது ஒட்டு மொத்த இந்திய சந்தைகளும் சரிந்து கொண்டு இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி கடந்த செப்டம்பர் 2019 காலாண்டுக்கு 4.5 சதவிகிதமாக மட்டுமே வந்தது, இந்த 2019 - 20 நிதி ஆண்டும் மொத்த ஜிடிபியே சுமாராக 5 சதவிகிதம் வரலாம் என மத்திய ரிசர்வ் வங்கியே சொன்னது போன்ற காரணங்களால் சந்தை கொஞ்சம் பலத்த இறக்கம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து கொண்டு இருக்கிறது.
இந்த நேரத்தில் இந்தியாவின் டாப் 30 நிறுவனங்களின் நிலை என்ன..?
| இந்தியாவின் டாப் 30 நிறுவனங்களின் சந்தை மதிப்பு விவரம் | |||||
|---|---|---|---|---|---|
| வ. எண் | நிறுவனங்களின் பெயர் | இன்றைய குளோசிங் விலை | 52 வார அதிகம் | 52 வார குறைந்த விலை | மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் (ரூ கோடியில்) |
| 1 | Reliance | 1,554.95 | 1,614.00 | 1,055.35 | 985,707.52 |
| 2 | TCS | 2,122.95 | 2,290.65 | 1,809.55 | 796,612.51 |
| 3 | HDFC Bank | 1,246.20 | 1,287.55 | 1,011.50 | 682,134.31 |
| 4 | HUL | 2,025.50 | 2,187.00 | 1,649.70 | 438,482.68 |
| 5 | HDFC | 2,264.00 | 2,357.00 | 1,821.55 | 391,075.66 |
| 6 | ICICI Bank | 524.75 | 537.30 | 335.90 | 339,271.08 |
| 7 | Kotak Mahindra | 1,674.30 | 1,682.40 | 1,157.05 | 319,864.26 |
| 8 | Infosys | 715.15 | 847.40 | 600.65 | 304,543.53 |
| 9 | ITC | 243.30 | 310.00 | 234.10 | 298,998.76 |
| 10 | SBI | 319.80 | 373.70 | 244.35 | 285,409.08 |
| 11 | Bajaj Finance | 3,950.45 | 4,256.30 | 2,330.00 | 237,694.26 |
| 12 | Bharti Airtel | 444.75 | 485.75 | 259.11 | 228,248.37 |
| 13 | Maruti Suzuki | 6,881.35 | 7,929.00 | 5,447.00 | 207,871.86 |
| 14 | Axis Bank | 717.55 | 826.55 | 580.00 | 202,311.41 |
| 15 | Larsen | 1,290.30 | 1,606.70 | 1,202.30 | 181,104.10 |
| 16 | Asian Paints | 1,717.35 | 1,833.65 | 1,254.35 | 164,727.83 |
| 17 | ONGC | 126.60 | 178.95 | 115.55 | 159,266.33 |
| 18 | HCL Tech | 560.20 | 595.00 | 460.08 | 152,019.52 |
| 19 | Bajaj Finserv | 8,859.05 | 9,280.00 | 5,619.25 | 140,980.52 |
| 20 | Wipro | 240.95 | 301.55 | 231.68 | 137,653.17 |
| 21 | Nestle | 14,159.50 | 15,150.00 | 10,028.10 | 136,519.83 |
| 22 | UltraTechCement | 4,156.35 | 4,903.90 | 3,340.00 | 119,958.13 |
| 23 | Coal India | 191.65 | 270.90 | 177.80 | 118,108.69 |
| 24 | IOC | 124.25 | 170.40 | 116.10 | 116,970.92 |
| 25 | HDFC Life | 575.00 | 646.40 | 345.00 | 116,045.81 |
| 26 | Avenue Supermar | 1,802.05 | 2,010.80 | 1,225.95 | 112,809.54 |
| 27 | NTPC | 112.55 | 145.85 | 106.75 | 111,363.24 |
| 28 | BPCL | 488.30 | 549.70 | 308.55 | 105,924.61 |
| 29 | Titan Company | 1,172.25 | 1,389.85 | 869.00 | 104,070.73 |
| 30 | Sun Pharma | 428.50 | 493.90 | 350.40 | 102,811.50 |


Click it and Unblock the Notifications