ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஒரு ஸ்மால் கேப் நிறுவனத்தின் பங்கு தொடர்ந்து 22ஆவது நாளாக அப்பர் சர்க்யூட் நிலையை எட்டி இருக்கிறது. லோட்டஸ் சாக்லேட் கம்பெனி என்ற ஸ்மால் கேப் நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமானது.
இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து 22ஆவது நாளாக ஒரு நாளைக்கு 5% என்ற அளவில் உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றின் இந்த பங்கு தொடர்ந்து 22ஆவது நாளாக அப்பர் சர்க்யூட் நிலையை எட்டி இருக்கிறது.

ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2044 ரூபாய் என உயர்ந்தது. குறிப்பாக தன்னுடைய 52 வார காலம் உச்சத்தை இந்த பங்கு எட்டியது. கடந்த 22 நாட்களில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 160 % உயர்ந்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிறுவனம் அண்மையில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டிற்கான தங்கள் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது. இதனை அடுத்து இந்த நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கின்றன ஏனெனில் இந்த நிறுவனத்தில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த நிகர வருமானம் இந்த ஓராண்டு காலத்தில் 333% அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாபமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த செய்தி வெளியானதில் இருந்தே லோட்டஸ் சாக்லேட் கம்பெனி பங்கு மதிப்பு கணிசமான அளவு வளர்ந்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்மால் கேப் நிறுவனம் தான் லோட்டஸ் சாக்லேட் கம்பெனி. இந்த நிறுவனத்தை பொருத்தவரை இந்தியாவின் முன்னணி சாக்லேட் உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. 1988 ஆம் ஆண்டு இது நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு 1992 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டிலும் மற்றும் வெளிநாட்டுகளுக்கும் சாக்லேட் மற்றும் கோகோ பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட் நிறுவனம் லோட்டஸ் சாக்லேட் கம்பெனி நிறுவன பங்குகளில் சுமார் 51% வாங்கி நிறுவனத்தை கையகப்படுத்தியது தற்போது ரிலையன்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமாக லோட்டஸ் சாக்லேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது லோட்டஸ் சாக்லேட் நிறுவனம் பிரிட்டானியா , நெஸ்லே உள்ளிட்ட பெரு நிறுவனங்களுடன் போட்டி போட்டு வருகிறது.
இந்நிறுவன சந்தை மூலதன மதிப்பு 2500 கோடி ரூபாய் ஆகும். இதன் புரமோட்டர்கள் 72 % பங்குகளையும் சில்லறை முதலீட்டாளர்கள் 28 % பங்குகளையும் கொண்டுள்ளனர். இந்த பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 213 ரூபாய், அதிகபட்ச மதிப்பு 2044 ரூபாய் ஆகும்.
Story written by: Devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications