முகேஷ் அம்பானி-யின் சாக்லேட் நிறுவனத்தின் பங்கு 10 நாட்களில் 50% உயர்வு..!

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தின் பங்கு கடந்த பத்து நாட்களில் மட்டும் சுமார் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. லோட்டஸ் சாக்லேட்(Lotus Chocolate) முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கெல்லாம் பெருமளவிலான லாபம் கிடைத்துள்ளது. லோட்டஸ் சாக்லேட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 250 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் 75 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் இதன் மதிப்பு சுமார் 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு கீழ் செயல்படும் துணை நிறுவனம் தான் லோட்டஸ் சாக்லேட் கம்பெனி. இந்த நிறுவனம் சாக்லேட் மற்றும் கோக்கோ பவுடர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம் 1992 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இது 2023 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது.

முகேஷ் அம்பானி-யின் சாக்லேட் நிறுவனத்தின் பங்கு 10 நாட்களில் 50% உயர்வு..!

இதனை அடுத்து லோட்டஸ் சாக்லேட் நிறுவனம் பிரிட்டானியா , நெஸ்லே உள்ளிட்ட பெரு நிறுவனங்களுடன் கடுமையாக போட்டி போட்டு வருகிறது. இந்த நிறுவனம் சந்தை செயல்பாட்டில் மட்டும் வெற்றி அடையவில்லை நிதி ரீதியான வளர்ச்சியையும் அடைந்துள்ளது. 2025 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் லோட்டஸ் சாக்லேட் நிறுவனத்தின் நிகர லாபம் 47,000 சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வருமானம் 337% உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 19. 60 லட்சம் ரூபாயிலிருந்து 9.41 கோடி ரூபாய் என அதிகரித்துள்ளது . நிறுவனத்தின் வருமானம் 32.31 கோடி ரூபாயிலிருந்து 141 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது.

லோட்டஸ் சாக்லேட் நிறுவனத்தின் பங்கு தொடர்ச்சியாக 9 நாட்களாக பங்கு அப்பர் சர்க்யூட் நிலையிலேயே இருக்கிறது. ஜூலை 31ஆம் தேதி கூட இந்நிறுவனத்தின் பங்கு 1141 ரூபாய் என்ற நிலையில் அப்பர் சர்கியூட்டை எட்டியது. இந்நிறுவன சந்தை மூலதன மதிப்பு 1266கோடி ரூபாய் ஆகும். இதன் புரமோட்டர்கள் 72 சதவிகித பங்குகளையும் சில்லறை முதலீட்டாளர்கள் 28 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளனர். இந்த பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 213 ரூபாய், அதிகபட்ச மதிப்பு 1141 ரூபாய் ஆகும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+