முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் ஜூன் 2020 காலாண்டு முடிவுகள் நேற்று, பங்குச் சந்தை நிறைவடைந்த பின், மாலை நேரத்தில் வெளியாயின.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் கம்பெனி என்பதால், இதன் காலாண்டு முடிவுகளை பல முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.
எதிர்பார்த்த படியே காலாண்டு முடிவுகள் வந்து இருக்கிறதா? பங்கு விலை எப்படி இருக்கிறது? போன்ற விவரங்களை கீழே விரிவாகப் பார்ப்போம்.
நிகர லாபம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிகர லாபம், இந்த ஜூன் 2020 காலாண்டில் 13,233 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இது கடந்த ஜூன் 2019 காலாண்டில் ஈட்டிய நிகர லாபத்தை விட 31 சதவிகிதம் அதிகமாம். நிகர லாபம் இந்த அளவுக்கு அதிகரித்து இருக்கிறது என்றால் வியாபாரம் வழக்கம் போல நடந்து இருக்கிறது போலருக்கே? என்கிறீர்களா. அங்கு தான் ட்விஸ்டே இருக்கிறது.
வருவாய் டவுன்
கடந்த ஜூன் 2019 காலாண்டில் ஈட்டிய வருவாயை விட 44 சதவிகிதம் குறைவாக 88,253 கோடி ரூபாயைத் தான் இந்த ஜூன் 2020 காலாண்டில் வருவாய் ஈட்டி இருக்கிறார்களாம். ஒரு கம்பெனிக்கு வருவாயே இவ்வளவு அடி வாங்கி இருக்கும் போது, நிகர லாபம் மட்டும் எப்படி அதிகரிக்கும்?
மற்ற வருமானம்
இந்த ஜூன் 2020 காலாண்டில், ரிலையன்ஸ் கம்பெனியின் நிகர லாபம் அதிகரிக்க, மற்ற வருமானம் (Other Income) பட்டியலில் கணக்கு காட்டிய 4,966 கோடி ரூபாய் தான் காரணமாம். இந்த பணம், இங்கிலாந்தைச் சேர்ந்த பிபி கச்சா எண்ணெய் கம்பெனியில் இருந்து எரிபொருள் மார்கெட்டிங் வியாபாரத்துக்காக கொடுக்கப்பட்ட பணமாம்.
செயல்பாட்டு லாபம்
வருவாய் அடி வாங்கியது போல, செயல்பாட்டு லாபம் (Operating Profit) 21 சதவிகிதம் சரிந்து இருக்கிறதாம். அதே போல கச்சா எண்ணெய் கம்பெனிகளுக்கு முக்கியமான க்ராஸ் ரிஃபைனிங் மார்ஜின் (ஒரு பேரல் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்தால் கிடைக்கும் பணம்) 6.3 டாலராக சரிந்து இருக்கிறதாம்.
பங்கு விலை
நேற்று 2,108 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை, இன்று காலை 2,114 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. காலை 11 மணி வரையான நிலவரத்தில் 2,052 ரூபாய் வரை விலை சரிந்து இருக்கிறது. ஆக இந்த ஜூன் 2020 காலாண்டில் சரியாக வியாபாரம் நடக்காதது, சந்தையில் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications