ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கினை வாங்கலாமா.. உங்கள் போர்ட்போலியோவில் இருக்கா?

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது ஏற்றம் காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதன் இலக்கு விலையினை 3100 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் கடந்த அமர்வில் முடிவு விலையான (BSE) 2732.40 ரூபாயில் இருந்து, 13.45% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த 6 அமர்வுகளில் இப்பங்கானது, 8% ஏற்றம் கண்டிள்ளது. நவம்பர் 23ம் தேதியன்று 2556.45 ரூபாயாக இருந்தது. இது தற்போது 2754.70 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இது கடந்த அமர்வுகளில் 7.74% ஆக உயர்ந்துள்ளது.

டெக்னிக்கல் நிலை?

டெக்னிக்கல் நிலை?

எப்படியிருப்பினும் இப்பங்கானது ஓவர் பாட் லெவலில் உள்ளது. ஆர் எஸ் ஐ (RSI) ஆனது, 71.9 ஆக உள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 18.58 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த பங்கின் விலையானது அதன் 52 வார உச்சத்தில் இருந்து 3.78% சரிவில் காணப்படுகிறது. இதன் 52 வார உச்ச விலையானது 2855 ரூபாயாகும். இது கடந்த ஏப்ரல் 29,2022 அன்று தொட்டது. இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது, 2181 ரூபாயாகும். இது கடந்த மார்ச் 8, 2022 அன்று எட்டியது.

டீசல் மீதான சலுகை

டீசல் மீதான சலுகை

இந்த நிறுவனம் அரசு டீசல் மீதான வரிச்சலுகை காரணமாக பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து சர்வதேச சந்தையில் இருந்து எண்ணெய் விலையானது 30% சரிவில் காணப்படுகிறது. இதற்கிடையில் தான் அரசு வரிச் சலுகையை அறிவித்தது. இது எண்ணெய் சுத்திகரிப்பாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

 வளர்ச்சி அதிகரிக்கும்

வளர்ச்சி அதிகரிக்கும்

இது போன்ற சில காரணிகளுக்கு மத்தியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் 5ஜி சேவையினையும் ரிலையன்ஸ் வேகமாக விரிவுபடுத்தி வரும் நிலையில், இதுவும் சாதகமாக அமையலாம். இதுவும் ஜியோவின் அர்பு விகிதத்தினை மேம்படுத்த சாதகமாக அமையலாம்.

பங்கு சந்தைக்குள் நுழையலாம்

பங்கு சந்தைக்குள் நுழையலாம்

இது தவிர ரிலையன்ஸ் நிறுவனம் தனது சில்லறை வணிகத்தினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மொத்தத்தில் ரிலையன்ஸ் குழுமம் வளர்ச்சிகாக அடுத்தடுத்த முதலீடுகளை செய்து வருகின்றது. இதற்கிடையில் இதன் சி ஏ ஜி ஆர் விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தனது தொலைத் தொடர்பு துறை, சில்லறை வர்த்தகம் என பங்கு சந்தைக்குள் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தேவையான நிதியினையும் எளிதில் திரட்ட முடியும். இது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு துணை புரியலாம்.

இலக்கு விலை

இலக்கு விலை

இதற்கிடையில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பங்கு விலையானது அதிகரிக்கலாம் என்றும். இதன் இலக்கு விலையனை 3050 ரூபாயாகவும் நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.

இது குறித்து டிப்ஸ்2டிரேடர் அறிக்கையில், 5ஜி சேவை, சர்வதேச சந்தையின் வளர்ச்சி என பல காரணிகளுக்கு மத்தியில், இப்பங்கின் விலையானது அதிகரிக்க வழிவகுக்கலாம் என கணித்துள்ளது. எனினும் டெக்னிக்கலாக ஓவர் பாட் லெவலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம். ஆக பங்கு விலையானது 2600 - 2610 என்ற லெவலில் வாங்கலாம். இதன் இலக்கு விலை 2840 - 2990 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்துள்ளது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+