தொடர்ந்து தொலைத் தொடர்பு சந்தையில் சமீபத்திய ஆண்டுகளாகவே வளர்ச்சி கண்டு வருகின்றது. இது தொடர்ந்து பொதுத் தேர்தலுக்கு பிறகு டெலிகாம் சந்தையில் வளர்ச்சி இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
இதற்கிடையில் உலகளாவிய தரகு நிறுவனமான ஜெஃபரீஸ், தேர்தலுக்கு பிறகு மிகப்பெரியதொரு கட்டண உயர்வு என்பது இருக்கலாம். இது விரைவான பங்கு மாற்றங்களுக்கு வழிவகுக்கும். ஆக ஒரு பங்குக்கு 93 ரூபாய் வரையில் ஏற்றம் காண வழிவகுக்கலாம் என கணித்துள்ளது.
பங்கு விலை அதிகரிக்கலாம்
ஆக அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ 1 - 6% எனும் அளவுக்கு கட்டணம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தினை வாங்கலாம் என தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பங்கானது தற்போதைய விலையில் இருந்து, 36% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இலக்கு விலை 3060 ரூபாயாக ஏற்றம் காணலாம்.
எவ்வளவு ஏற்றம்?
மார்ச் 2025-க்குள் இப்பங்கின் விலை 28% வரையில் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிகம் என்பது தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பலாம். இதன் காரணமாக கேப்கெஸ் வளர்ச்சி காணலாம். தொலைத் தொடர்பு துறைகளில் வளர்ச்சி காணலாம்.
எவ்வளவு சரிவு?
இந்த நிறுவனத்தின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 52 வார குறைந்தபட்ச விலை 2180 ரூபாயினை எட்டியுள்ளது. இது இந்த வாரத்தில் எட்டியுள்ளது. இப்பங்கின் விலையானது நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 13% வரையில் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேபி மார்கன் என்ன சொல்லுது?
இதே ஜேபி மார்கன் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் என்பது சற்றே மேன்மையடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் 2024 - 25ம் ஆண்டில் இதன் வளர்ச்சி விகிதமானது இன்னும் மேன்மையடையலாம். ஆக இப்பங்கு விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications