ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited) என்பது மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான தொழிற்சாலை நிறுவனம் ஆகும். இதில் எண்ணெய், வாயு, பைமாஸ், கெமிக்கல்ஸ், ரீட்டெயில், தொலைத்தொடர்பு போன்ற பல துறைகள் அடங்கும். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்நிறுவனம் பங்கு சந்தையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் தான், கடந்த 2024ஆம் ஆண்டில் பெரிதாக வளர்ச்சி காணாமல் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) பங்குகள், இந்தாண்டின் (2025) முதல் காலாண்டில் 25% வரை உயர்வை கண்டுள்ளது. எனவே இது, சந்தையில் நிலையான வளர்ச்சியா அல்லது தொழில்நுட்ப மீட்டெடுப்பா (technical rebound) என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பங்கின் தொழில்நுட்ப அமைப்பைப் பற்றி கண்காணிக்கும் நிபுணர்கள், இந்த உயர் நிலை வளர்ச்சி இன்னும் தொடரும் என்று கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக Choice Broking நிறுவனத்தின் டெரிவேட்டிவ் நிபுணர் ஹர்திக் மாதாலியா கூறுகையில், "பங்கு, குறிப்பிட்ட வரம்பில் வாங்கும் எண்ணத்துடன் ஒற்றுமையாக இருந்தது. இப்போது அந்த வரம்பை கடந்து, திடீர் உயர்வை கண்டுள்ளது. எனவே, இது நீண்டகால நேர்மறை வளர்ச்சியை உறுதி செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். மேலும், ரிலையன்ஸ் தற்போது ரூ.1,517.80 விலையில் வர்த்தகம் செய்யும் நிலையில் உள்ளது. இந்த உயர்வு தொடரும் வகையில் தான் உள்ளது. சமீபத்தில் ஒரு பிரேக் அவுட் (breakout) நிகழ்ந்தது. இருப்பினும், ரூ.1,530 என்ற அளவில் நிலையாக உள்ளது என்று கூறியுள்ளார். அதேசமயம், சிறிய அளவிலான பின்னடைவை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், இது குறுகிய கால வர்த்தகர்களுக்கு புதிய சந்தர்ப்பமாக அமையலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பங்கின் ரிலேட்டிவ் ஸ்ட்ரென்த் இன்டெக்ஸ் (RSI) தற்போது 66.83 ஆக உள்ளது, இது அடுத்த சில காலங்களில் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அனைத்து மூவிங் சராசரிகளுக்கும் மேலேயே வர்த்தகம் செய்து வருகிறது. போனான்சா போர்ட்ஃபோலியோ நிறுவனத்தில் தொழில்நுட்ப நிபுணர் ட்ருமில் வித்லானி கூறுகையில், "பங்கு சமீபத்தில் ஒரே நிலையாக முடிந்தது. இது, உயர்ந்த விலையில் விற்பனையாளர் அதிகமாக இருப்பதை காட்டுகிறது. மேலும், ரூ.1,530 முதல் 1,535 வரை இருக்கும் பகுதியில் எதிர்ப்பு நிலை காணப்படுகிறது. இது செப்டம்பர் 2024இல் ஏற்பட்ட உயர்ந்த மதிப்புடன் பொருந்துகிறது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "ரூ.1,500 முதல் 1,510 வரை உள்ள பங்குகளை குறைந்த விலையில் வாங்குவதே (buy-on-dips) சிறந்தது. நஷ்டம் ஏற்படுவதை தவிர்க்க ரூ.1,465 விலையை நிர்ணயிக்க வேண்டும். குறுகிய கால இலக்குகளாக ரூ.1,575 மற்றும் ரூ.1,600 இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். YES SECURITIES துணைத் தலைவர் அமித் திரிவேடியும் இதே கருத்தை கூறியுள்ளார். அவரும், குறைந்த விலையில் வாங்கும் யுக்தி மிகவும் புத்திசாலித்தனமானது என்று கூறியுள்ளார்.
இந்த வாரத் தொடக்கத்தில், ரிலையன்ஸ் ஒரு முக்கியமான நிறுவன மறுசீரமைப்பை அறிவித்துள்ளது. அதன் வாடிக்கையாளர் பொருட்கள் (FMCG) பிரிவுகள், "New Reliance Consumer Products Ltd (New RCPL)" என்ற புதிய துணை நிறுவனமாக பிரிக்கப்பட்டு, ரீடெயில் வியாபாரத்துக்கான IPOக்கு தயாராகிறது. இதற்கு முன்பு Reliance Retail Ventures, Reliance Retail மற்றும் Reliance Consumer Products என்று மூன்று பிரிவுகளில் பரவி இருந்த FMCG பிராண்டுகளை இப்போது New RCPL கீழ் ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது Jio Platforms உடன் பயன்படுத்தப்பட்ட அமைப்பை போலவே இருக்கும். இது வாடிக்கையாளர் வணிகத்துக்கு தெளிவான மற்றும் கவனத்தை வழங்கும் நோக்கத்துடன் 2025 ஜூன் 25ஆம் தேதி தேசிய நிறுவனர் சட்டத் துறை உத்தரவின் படி செயல்படுத்தப்பட்டுள்ளது. வணிகம், நிதி, சந்தை ஆகிய துறைகளில் தரவுகளை ஆராய்ந்து, மதிப்பாய்வு செய்து கருத்துக்களை வழங்கும் நிபுணர்கள் இதனை வர்த்தக செயல்பாடுகளை எளிதாக்கும் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மதிப்பீட்டுப் புரிதலை மேம்படுத்தும் முக்கிய மூலதன திட்டமாகக் கருதுகின்றனர். Campa, Independence, Sosyo மற்றும் Ravalgaon போன்ற பிராண்டுகளை உள்ளடக்கிய இந்த வாடிக்கையாளர் பிரிவு, 2025 நிதியாண்டில் ரூ.11,500 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் வணிக வளர்ச்சி மற்றும் பங்குச் சந்தையில் மதிப்பீடு மேம்பாட்டிற்கு வலுவான அடித்தளமாக அமைவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications