நம் நாட்டின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் அனில் அம்பானி. 20 ஆண்டுகளுக்கு முன்பு, முகேஷ் அம்பானியை காட்டிலும் இவர் தான் வணிகத்தில் கொடி கட்டி பறந்தார். ஆனால் தவறான முதலீடு, நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது போன்ற காரணங்களால் இன்று அனில் அம்பானியின் நிலை, எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே என்று பலரும் நினைக்கும் அளவுக்கு உள்ளது. கடன் நெருக்கடியால் அனில் அம்பானி சிக்கி தவிக்கிறார்.
ஆனாலும் மனுஷன் கொஞ்சம் கூட நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து தனது வர்த்தக நிறுவனங்களை வெற்றி பாதைக்கு திருப்பும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதன் பலனாக அவரது சில நிறுவனங்கள் புத்துயிர் பெற தொடங்கியுள்ளன. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் பல கடனிலிருந்து விடுபட்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு லாபம் ஈட்டியுள்ளன.

எடுத்துக்காட்டாக, அனில் அம்பானியின் மிகவும் விருப்பமான நிறுவனமான ரிலையன்ஸ் பவர் கடந்த நிதியாண்டில் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,947.83 கோடி ஈட்டியுள்ளது. முந்தைய 2023-24ம் நிதியாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.2,068.38 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. நிறுவனங்கள் மெல்ல மெல்ல வளர்ச்சி பாதைக்கு திரும்ப தொடங்கியிருப்பது அனில் அம்பானிக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகும்.
இருப்பினும், வரும் 23ம் தேதி அனில் அம்பானிக்கு மிக முக்கியமான நாளாக மாறியுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (மே 23) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் அந்த கூட்டத்தில் வெளியிடப்பட உள்ளது.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள முக்கியமான ஒரு நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர். இந்நிறுவனம் மின்சாரம்,சாலைகள்,மெட்ரோ ரயில் மற்றும் பிற உள்கட்டமைப்பு துறைகளுக்கு பொறியியல் மற்றும் கட்டுமான சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம் அதன் சிறப்பு நோக்க பிரிவுகள் மூலம் பாதுகாப்பு துறை மற்றும் உள்கட்டமைப்பு பகுதிகளில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பதில் ஈடுபட்டுள்ளது.
2024 டிசம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கு ரூ.3,298.35 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமையன்று இந்நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியாகி உள்ளது. மேலும், நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த விவாதிக்கப்பட உள்ளதால் அன்றைய தினம் அனில் அம்பானிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மாறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.72 சதவீதம் உயர்ந்து ரூ.279.15ஆக இருந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications