ரூ. 2,500 கோடி முதலீடு.. 80,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு.. முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி திட்டம்

2018-ம் ஆண்டிற்கான உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தன்னுடைய அடுத்த 2,500 கோடி ரூபாய் முதலீடுகள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

வட கிழக்கு மாநிலமான அசாமில் ரீடெய்ல், பெட்ரோலியம், டெலிகாம், சுற்றுலா மற்றும் விளையாட்டு எனப் பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் முதலீடு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ரீடெய்ல்

ரீடெய்ல்

முகேஷ் அம்பானியின் இந்தத் திட்டத்தின் கீழ் அசாமில் மட்டும் தற்போது இரண்டு ரீடெய்ல் கடைகளை மட்டுமே வைத்துள்ள ரிலையன்ஸ் 40 கடைகளை நிறுவனம் இருக்கின்றது.

மேலும் 27 பெட்ரோல் நிலையங்கள் மட்டுமே உள்ள நிலையில் 165 ஆக அதனை அதிகரிக்கவும் ரிலையன்ஸ் முடிவு செய்துள்ளது.

 

 வேலை வாய்ப்புகள்

வேலை வாய்ப்புகள்

அசாமின் 145 தாலுக்காளிலும் புதிதாக அலுவலகங்களைத் திறக்க இருப்பதாகவும் அம்பானி கூறியுள்ளார். தற்போது அசாமில் 20,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், அடுத்து 1,00,000 வேலை வாய்ப்புகள் அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

டெலிகாம் சேவை

டெலிகாம் சேவை

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அசாமிற்குக் குறைந்த அளவில் மட்டுமே முக்கியத்துவம் அளித்து வந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு இது தான் முதன்மையான சந்தை என்றும் அம்பானி கூறியுள்ளார்.

பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகம்

அசாம் அரசுடன் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனும் இணைந்து வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத சுற்றுலாவை மேம்படுத்த ஒரு பல்கலைக்கழகத்தினை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.

கால் பந்து

கால் பந்து

இந்திய சூப்பர் லீக் எனப்படும் கால் பந்து விளையாட்டு போட்டி அசாமில் மிகப் பெரிய வெற்றியை அளித்துள்ளது என்றும் இதற்காகவும் அசாம் அரசுடன் இணைந்து கால் பந்து அகாடமி ஒன்றைத் துவங்கி சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

முதலீடு

முதலீடு

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் இது வரை எந்தக் கார்ப்ரேட்டும் செய்யாத அளவிற்கு 5,000 கோடி ரூபாயினை அசாமில் முதலீடு செய்துள்ளதாகக் கூறினார்.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

அசாமில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் அதனை வரும் மாதங்களில் பல மடங்காக அதிகரிப்பதற்காகப் பணிகளைச் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 அசாம்

அசாம்

அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018-ஐ ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவித்துவிட்டு இன்னும் 50 ஆண்டுகளில் இந்திய அரசின் முக்கியப் பங்கு வருவாய் அசாமில் வரும் அளவிற்கு வளர்ச்சி அடையும் என்று கூறினார்.

பட்ஜெட் 2018

பட்ஜெட் 2018

மத்திய அரசு வட கிழக்கு மாநிலங்களுக்குப் பஜெட்டில் சலுகைகளை அளித்துள்ள நிலையில் முகேஷ் அம்பானி மோடி அரசின் சிறந்த பட்ஜெட் இது என்றும் அனைத்துத் துறைகளுடன் விவசாயத் துறைக்கு அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+