முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில் சந்தை மூலதன அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு பெருமளவில் சரிவை சந்தித்துள்ளது.

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த சில நாட்களாகவே பெரும் சரிவிலேயே இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 1 லட்சம் ரூபாய் வரை வீழ்ச்சி அடைந்து 18 லட்சம் கோடிக்கும் கீழ் சென்றடைந்திருக்கிறது.

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வாரத்தில் தொடக்க நாளான இன்று மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 4 சதவீதம் வரை சரிவடைந்தது ஏராளமான முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்த பங்கினை விற்பனை செய்ததே இதன் மதிப்பு குறைவதற்கு காரணமாக அமைந்தது. தற்போது மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1,300 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகிறது.

நிஃப்டி 50 குறியீட்டில் அதிக இழப்பை சந்தித்த ஒரு பங்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருக்கிறது. முகேஷ் அம்பானி சொந்தமான reliance industries நிறுவனம் ஹெச்டிஎஃப்சிக்கு அடுத்ததாக அதிக வெயிட்டேஜ் கொண்ட ஒரு பங்காக நிஃப்டி 50இல் இடம் பெற்றிருந்தது. ஏற்கனவே hdfc வங்கி நிர்வாகத்தில் ஏற்பட்ட தலைமை மாற்றம் அந்த நிறுவன பங்கினை சரிவடைய செய்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் பங்கு மதிப்பும் சரிவடைந்திருப்பது ஒட்டுமொத்தமாகவே நிஃப்டி குறியீட்டையே சரிவடைய செய்தது.

Also Read

தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 17.65 லட்சம் கோடியாக இருக்கிறது. அமெரிக்கா ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் வரத்து தொடர்ந்து நின்று போய் இருக்கிறது இது இந்தியாவை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களை அதிகம் பாதித்திருக்கிறது. இந்தியாவின் முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி அதிக தாக்கத்தை எதிர்கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 8% சரிவை சந்தித்து இருக்கிறது. ரிலையன்ஸ் பங்கு மதிப்பு 1330 ரூபாய் என்ற அளவுக்குள்ளாகவே சில காலம் ஏறி இறங்கும் என பங்குச் சந்தை முதலீட்டு நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Recommended For You

இதற்கிடையே காலையில் சரிவில் வர்த்தகத்தை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை பிற்பகலில் பெருமளவில் ஏற்றமடைய தொடங்கி இருக்கிறது. நிஃப்டி 50 காலை 10 மணியளவில் 22,570 புள்ளிகள் என சரிவை சந்தித்தது இதனை அடுத்து படிப்படியாக உயர்ந்த சந்தை பகல் 1:30 மணி அளவில் 22,885 புள்ளிகளாக வர்த்தகமானது. சென்ச்கெஸ் காலை 72,0 86 புள்ளிகளாக வர்த்தகத்தை தொடங்கியது இதனை அடுத்து படிப்படியாக உயர்ந்து அதிகபட்சமாக 73, 830 புள்ளிகள் என்ற அளவை எட்டியது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+