மிஸ் பண்ணாதீங்க.. இந்த 5 பங்குகளும் லாபத்தை அள்ளி கொடுக்கும்.. அஜித் மிஸ்ரா கணிப்பு!

தொடர்ந்து 5 மாதங்களாக சரிவு கண்டு வந்த இந்திய பங்குச் சந்தைகள் கடந்த மார்ச் மாதத்தில் மீட்சி கண்டன. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. மேலும் அவர்கள் மீண்டும் பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில், நீண்ட கால அடிப்படையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டில் நல்ல ஆதாயம் தர வாய்ப்புள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்டிஎஃப்சி வங்கி உள்பட 5 நிறுவன பங்குகளை ரெலிகேர் புரோக்கிங் நிறுவனத்தின் அஜித் மிஸ்ரா பங்குகளை பரிந்துரை செய்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் முதல் சில்லரை வர்த்தகம் வரை பல்வேறு துறைகளின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி துறையில் ரூ.35,000 கோடி முதலீடு செய்கிறது, ஜியோவின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போன்றவை இந்நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும். கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை ரூ.1,275ஆக இருந்தது. இந்த பங்கின் இலக்கு விலை ரூ.1,570ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த நிதியாண்டில் இப்பங்கின் விலை 23 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அஜித் மிஸ்ரா தெரிவித்தார். கடந்த ஜூலை 8ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,608.95ஐ எட்டியது.

மிஸ் பண்ணாதீங்க.. இந்த 5 பங்குகளும் லாபத்தை அள்ளி கொடுக்கும்.. அஜித் மிஸ்ரா கணிப்பு!

எச்டிஎஃப்சி வங்கி: நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கி குறித்து அஜித் மிஸ்ரா கூறுகையில், வங்கிகள் வழங்கிய மொத்த கடனில் 15.6 சதவீதமும், திரட்டிய டெபாசிட்டில் 11.6 சதவீதமும் பங்களிப்பை கொண்டுள்ளது. மேலும் வங்கி, காப்பீடு, ஏஎம்சி மற்றும் செக்யூரிட்டீஸ் வணிகத்தில் தனது வர்த்தக இருப்பை கொண்டுள்ளது. இந்த வங்கி குறைந்த மொத்த மற்றும் நிகர வாராக் கடனுடன் வலுவான கடன் தரத்தை கொண்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் எச்டிஎஃப்சி வங்கி பங்கு விலை ரூ.1,828.50ஆக இருந்தது. இந்த பங்கின் இலக்கு விலை ரூ.2,065ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இப்பங்கின் விலை 13 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.1,880ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.

ஐடிசி: நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி, எஃப்எம்சிஜி, ஹோட்டல்கள், வேளாண், பேப்பர் போர்ட்ஸ் மற்றும் ஐடி என பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வருகிறது. இது துறை சார்ந்த அபாயங்களை குறைப்பதோடு மட்டுமின்றி நிலையான வருவாய் வரத்தை உறுதி செய்யும். இந்த நிறுவனம் வலுவான தாராள பணப்புழக்கங்களை உருவாக்குகிறது மற்றும் அதிக டிவிடெண்ட் செலுத்தலை பராமரிக்கிறது. இது வருமானத்தை மையமாகக் கொண்ட முதலீட்டாளர்களை ஈர்ப்பதாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ஐடிசி பங்கு விலை ரூ.409.80ஆக இருந்தது. இந்த பங்கின் இலக்கு விலை ரூ.548ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இப்பங்கின் விலை 34 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அஜித் மிஸ்ரா தெரிவித்தார்.கடந்த செப்டம்பர் 27ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.500.01ஐ தொட்டது.

எச்டிஎஃப்சி லைஃப் இன்ஸ்யூரன்ஸ்: அஜித் மிஸ்ரா கூறுகையில், எச்டிஎஃப்சி வங்கிக்கு சொந்தமான நாட்டின் மிகப்பெரிய தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் எச்டிஎஃப்சி லைஃப் இன்ஸ்யூரன்ஸ். 600 கிளைகள் மற்றும் 2.4 லட்சம் முகவர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் வலுவான இருப்பை கொண்டுள்ளது. ULIP தேவையிலிருந்து குறுகிய கால லாப அழுத்தங்கள் இருந்தபோதிலும், அடுத்த நிதியாண்டிலிருந்து லாப மீட்சி எதிர்பார்க்கப்படுகிறது. ஒழுங்குமுறையின் கடுமையான விதிகள் குறைந்து, வளாச்சி நிலைத்திருப்பதால் மறுமதிப்பீட்டு சாத்தியம் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் எச்டிஎஃப்சி லைஃப் இன்ஸ்யூரன்ஸ் பங்கு விலை ரூ.685.55ஆக இருந்தது. இந்த பங்கின் இலக்கு விலை ரூ.870ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இப்பங்கின் விலை 27 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.கடந்த செப்டம்பர் 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.760.95ஐ எட்டியது.

கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்: கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (சிஏஎம்எஸ்) நிறுவனம் மியூச்சுவல் பண்டுகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவராகும் (ஆர்டிஏ). 2024 டிசம்பர் 24ம் தேதி நிலவரப்படி, மியூச்சுவல் பண்டுகளின் நிர்வகிக்கும் சொத்து மதிப்பின் 68 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனம் பரிவர்த்தனை மதிப்பு சங்கிலி முழுவதும் முழுமையான தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பங்கு விலை ரூ.3,715ஆக இருந்தது. இந்த பங்கின் இலக்கு விலை ரூ.4,390ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த நிதியாண்டில் இப்பங்கின் விலை 18 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அஜித் மிஸ்ரா தெரிவித்தார். கடந்த டிசம்பர் 12ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.5,367.45ஐ எட்டியது.

புதிய 2025-26ம் நிதியாண்டு நாளை தொடங்குகிறது. இந்த நிதியாண்டின் ஆரம்பத்திலேயே பங்குச் சந்தைகள் பெரிய சவாலை எதிர்கொள்ளுகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி அமலுக்கு வர உள்ளது. இது சர்வதேச அளவில் பெரிய வர்த்தக போரை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் இந்தியாவின் அந்நாட்டுக்கான ஏற்றுமதியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மருந்து மற்றும் ஆபரணங்கள் துறைகளில் வரி விதிப்பின் தாக்கம் கடுமையான இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய தொடங்கி இருப்பது பங்குச் சந்தைகளுக்கு சாதகமான அம்சமாகும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+