இன்று ஜனவரி 26, 2026 இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. 1950ஆம் ஆண்டு அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளை நினைவுகூரும் இந்த தேசிய விடுமுறை நாளில், நாடு முழுவதும் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) ஆகியவை முழுமையாக மூடப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ விடுமுறை அட்டவணையின்படி, ஜனவரி 26 அன்று ரிபப்ளிக் டே காரணமாக என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் பங்கு, ஈக்விட்டி டெரிவேட்டிவ்ஸ், கரன்சி டெரிவேட்டிவ்ஸ், செக்யூரிட்டீஸ் லெண்டிங் போன்ற அனைத்து பிரிவுகளிலும் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று பங்குகள் வாங்கவோ விற்கவோ முடியாது. வர்த்தகம் அடுத்த வேலை நாளான ஜனவரி 27 செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கும்.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் சுமார் 1 சதவீதம் சரிந்து முடிந்தன. பல துறைகளில் அதிகப்படியான விற்பனை, ரூபாய் டாலருக்கு எதிராக வரலாற்று குறைந்த அளவை எட்டியது, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றம், தங்கம் - வெள்ளி போன்ற பாதுகாப்பு சொத்துகளில் அதிகப்படியான முதலீடு போன்ற காரணங்கள் இந்த சரிவுக்கு வழிவகுத்தன.
2026ல் ஜனவரி மாதம் அமெரிக்கா வெனிசுலா-வா தாக்கிய நாளில் இருந்து பங்குச்சந்தை கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆனால் 2025ஆம் ஆண்டு இந்திய பங்குச் சந்தைக்கு ஒரளவுக்கு நல்ல ஆண்டாக அமைந்தது. நிஃப்டி குறியீடு தொடர்ச்சியாக 10ஆவது ஆண்டாக நேர்மறை வருமானத்தை அளித்தது. ஆண்டு முடிவில் சுமார் 10.5 சதவீதம் உயர்வுடன் முடிந்தது.
இது குறிப்பிடத்தக்க வெற்றி என்று தான் சொல்ல வேண்டும், ஏனெனில் 2025இல் இந்தியா-பாகிஸ்தான் புவிசார் அரசியல் பதற்றங்கள், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி அச்சுறுத்தல்கள், ரூபாய் 91ஐ தாண்டி பலவீனமடைதல், பங்கு மதிப்பீடுகள் அதிகமாக இருப்பது போன்ற சவால்கள் இருந்தன. இருந்தும் இந்திய பங்குகள் உறுதியாக நின்றன.
ஆனால் 2026ல் நிலைமை மோசமாகிக்கொண்டே வருகிறது, 2026ஆம் ஆண்டு துவங்கியதில் இருந்து அமெரிக்கா ராணுவம் வெனிசுலா மீது தாக்குதல், ஈரான் மக்கள் போராட்டம், அமெரிக்கா கியூபா-வை அடுத்து தாக்குவதாக டிரம்ப் அறிவித்தது, கிரீன்லாந்து கைப்பற்றல், கனடா - சீனா வர்த்தக ஒப்பந்தம், ஐரோப்பா மீது டிரம்ப் அறிவித்த வரி, கனடா மீது 100% வரி அச்சுறுத்தல், அமெரிக்காவுக்கு எதிராக ஐரோப்பா எடுக்கும் நடவடிக்கை, சமீபத்தில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவரை மாற்றுவதற்கான அறிவிப்பு என பல விஷயங்கள் முதலீட்டு சந்தையை புரட்டிப்போட்டு வருகிறது.
இதனால் இந்திய சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர். உள்நாட்டு முதலீட்டாளர்களால் ஈடு கொடுக்க முடியாத காரணத்தால் தற்போது பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது.
உதாரணமாக 2025இல் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) சுமார் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றனர். இந்த முதலீட்டை சீனா, ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற சந்தைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் FII விற்கப்பட்ட பங்குகளை வாங்கிய காரணத்தால் சரிவில் இருந்து பங்குச்சந்தை தப்பித்தது. இதில் முக்கியமாக எஸ்ஐபி மூலம் ரூ.3.2 லட்சம் கோடி பங்குச்சந்தைக்குள் வந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது, FII முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்து சந்தையை சரிவுக்கு தள்ளியுள்ளனர்.
கடந்த 30 நாட்களில் FII முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பங்குச்சந்தையில் இருந்து 41,474 கோடி ரூபாயும், கடன் சந்தையில் இருந்து 5614 கோடி ரூபாயும் முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். இதன் மூலம் மொத்தம் 45304 கோடி ரூபாய் முதலீட்டை விற்றுள்ளனர்.
இன்றைய விடுமுறை சந்தை செயல்பாட்டை விட தனிப்பட்ட நிதி திட்டமிடலுக்கு சிந்திக்கும் வாய்ப்பை அளிக்கிறது. குறுகிய கால ஏற்ற இறக்கங்களில் சர்வதேச காரணிகள் முக்கிய பங்கு வகித்தாலும், நீண்ட கால போக்கு உள்நாட்டு முதலீட்டாளர்களால் வலுப்படுத்தப்பட்டு சாதகமாக உள்ளது.
இந்த நிலையில் வர்த்தகம் மீண்டும் தொடங்கும் போது, ரூபாய் போக்கு, வெளிநாட்டு நிதி ஓட்டம், உலக பொருளாதார மற்றும் புவிசார் நிகழ்வுகள் சந்தை இயக்கத்தை தீர்மானிக்கும் என்பதால் சரியாக திட்டமிட்டு முதலீட்டாளர்கள் டார்கெட் செய்து முதலீடு செய்ய முடியும். இன்றைய குடியரசு தினம் கொண்டாட்டமாக மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு திட்டமிடுவதற்கான ஒரு கேப் ஆக விளங்குகிறது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications