பங்குச்சந்தை எப்படி இருந்தா என்ன? ஸ்மால்கேப் பங்குகளில் பணத்தை கொட்டும் முதலீட்டாளர்கள்..!

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு பொற்காலமாக இருந்தது. 2024 செப்டம்பரில் இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதன் பிறகு பங்குச்சந்தை சரிவு காண தொடங்கியது. தற்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீடு சென்செக்ஸ் அதன் வரலாற்று உச்சத்தை காட்டிலும் சுமார் சுமார் 9 ஆயிரம் புள்ளிகள் குறைந்து காணப்படுகிறது. பொதுவாக பங்குச் சந்தை தொடர்ந்து சரிவில் இருக்கும் போது சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்ய தயங்குவார்கள். ஏனென்றால் பங்கின் விலை மேலும் குறைந்தால் பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியது இருக்குமே என்ற பயம்தான்.

ஆனால் இப்போது அதற்கு நேர்மாறாக சில்லரை முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீட்டை அதிகரித்து இருக்கிறார்கள் மற்றும் நல்ல லாபத்தையும் பார்த்துள்ளார்கள் என்ற விவரம் தெரியவந்துள்ளது. 2024 அக்டோபர்-டிசம்பர் கால கட்டத்தில், சில்லரை முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட 9 ஸ்மால்கேப் பங்குகளில் தங்களது பங்கு மூலதனத்தை அதிகரித்துள்ளனர்.

பங்குச்சந்தை எப்படி இருந்தா என்ன? ஸ்மால்கேப் பங்குகளில் பணத்தை கொட்டும் முதலீட்டாளர்கள்..!

கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ், வி2 ரீடெய்ல், இந்திரபிரஸ்தா மெடிக்கல்ஸ், போகர்னா, லாயிட்ஸ் மெட்டல்ஸ், சியாராம் சில்க் மில்ஸ், ஆனந்த் ராஜ், பிரிசிஷன் கேம்ஷாஃப்ட்ஸ் மற்றும் அவுதும் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகிய பங்குகளில் சில்லரை முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை அதிகரித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் காலாண்டில் சியாராம் சில்க் மில்ஸ் உள்ளிட்ட இந்த 9 ஸ்மால்கேப் நிறுவன பங்குகளில் தங்களது முதலீட்டை இருமடங்கு அதிகரித்துள்ளனர். அதேசமயம், கடந்த 6 மாதத்தில் கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ், வி2 ரீடெய்ல், இந்திரபிரஸ்தா மெடிக்கல்ஸ் ஆகிய பங்குகள் முதலீட்டாளர்களின் செல்வத்தை இரு மடங்கு அதிகரித்துள்ளது. சில நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களுக்கு 80 சதவீதம் வரை ஆதாயம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்குச் சந்தையின் போக்கு எதிர்மறையாக இருந்தபோதிலும் சில்லரை முதலீட்டாளர்கள் தங்களது வெற்றியாளர்களை அதாவது நல்ல லாபம் தரும் பங்குகளை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. அதேசமயம். இந்த பங்குகளில் முதலீடு செய்யலாமா என்றால், ஸ்மால்கேப் உள்ள அபாயங்களை கருத்தில் கொண்டு பங்குகளில் முதலீடு செய்வதில் மிகவும் கவனமாக செயல்படுங்கள் என்று முதலீட்டாளர்களை நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+