ரூ.50,000 கோடி மதிப்புள்ள பங்குகள் கைமாறியது.. முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரிலையன்ஸ்..!
ரிலையன்ஸ் நிறுவனம் மொத்தமாகத் தன்னுடைய 39 கோடி பங்குகளை 50,000 கோடி ரூபாய்க்கு மும்பை பங்குச் சந்தையின் மொத்த விற்பனை ஒப்பந்தம் மூலமாகப் புதன்கிழமை கை மாற்றியது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இரண்டு பங்குதார குழு நிறுவனங்களான டாட்வம் மற்றும் கருணா கமர்ஷியல்ஸ் நிறுவனங்கள் தான் இந்தப் பங்குகளை மொத்தமாக வாங்கியிருக்கின்றன.
பத்ரி கமர்ஷியல்ஸ், புவனேஷ் எண்டர்பிரைசஸ் மற்றும் அஜிதேஷ் எண்டர்பிரைசஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் நிறுவனங்கள் ஆவர்.
40 கோடி பங்குகள் கைமாற்றம்
மார்ச் 9-ம் தேதி முதல் மொத்தம் 40 கோடி ரிலையன்ஸ் பங்குகள் அதாவது ரிலையன்ஸ் நிறுவனத்தின் 12 சதவீத பங்குகள் மொத்தமாகத் தங்களது பங்குதாரர்கள் குழு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
19 கோடி மதிப்பிலான பங்குகள் பெறும் நிறுவனங்கள்
ரிலையன்ஸ் நிறுவனம் மார்ச் 2-ம் தேதி 119 கோடி மதிப்பிலான பங்குகளை டெலிகாம் துறைக்காகக் கைமாற்ற இருப்பதாகவும், இதன் மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும், தங்களது 8 பங்குதாரர்கள் நிறுவனங்கள் மற்றும் பிற 15 நிறுவனங்கள் சேர்ந்து கூட்டாக இந்த மொத்த ஒப்பந்தத்தைப் பெற இருப்பதாகவும் பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களின் தகவல்கள் தெரிவித்தன.
பங்குகள் கை மாற்றத்தால் ஏதேனும் பாதிப்பு உண்டா?
தங்களது பங்குதாரர்கள் நிறுவனங்களுடன் பங்குகளைக் கை மாற்றுவதால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், இதனால் 45.24 சதவீத பங்குகள் பங்குதாரர்களிடம் இருக்கும் என்றும், அதில் 36.7 சதவீதம் ரிலையன்ஸ் ஈக்விட்டி பங்குகளாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அம்பானி குடும்பத்தினரிடம் உள்ள மொத்த பங்குகள்
நமக்குக் கிடைத்த அறிக்கையின் படி ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியிடம் 36.15 லட்சம் பங்குகளும், அவரது மனைவி நீத்தாவிடம் 33.98 லட்சம் பங்குகளும், பிள்ளைகள் ஆக்காஷ் மற்று இஷா பெயரில் 33.63 லட்சம் பங்குகளும், ஆனந் பெயரில் 1 லட்சம் பங்குகளும் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications