Multibagger Stock: இந்திய பங்கு சந்தையில் பல்வேறு பென்னி பங்குகள் என்பது மல்டிபேக்கர் பங்குகளாக ஏற்றம் கண்டுள்ளன அப்படி ஏற்றம் கண்ட பங்குகளில் மெர்குரி மெட்டல்ஸ்-ம் ஒன்று. இந்த பென்னி பங்கானது கடந்த 1 ஆண்டில் நல்ல லாபம் கொடுத்துள்ள பங்குகளில் இதுவும் ஒன்று.
பிஎஸ்இ-ல் இந்த பங்கின் விலையானது சுமார் 0.93 ரூபாயில் இருந்து, 15.62 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது இந்த காலகட்டத்தில் மட்டும் 1600 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. இதற்கிடையில் தான் இந்த பங்கும் மல்டிபேக்கர் பங்குகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது.

கடந்த மூன்று அமர்வுகளாகவே இந்த மல்டிபேக்கர் பென்னி பங்கானது அப்பர் சர்க்யூட் ஆகியுள்ளது. இதே கடந்த கடந்த 5 அமர்வுகளில் மட்டும் இப்பங்கானது 112.50 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. இதே கடந்த 1 மாதத்தில் இப்பங்கானது 5 சதவீத ஏற்றத்தினையும் கண்டுள்ளது.
இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரையில் 12.51 ரூபாய் முதல் 15.62 ரூபாய் வரையில் ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 25 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலையானது 5.65 ரூபாயில் இருந்து, 12.62 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இது 175 சதவீதம் எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 1 வருடத்தில் இப்பங்கானது 0.93 ரூபாயில் இருந்து 15.62 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது சுமார் 1600 சதவீதம் எனும் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த 4 ஆண்டுகளில் இப்பங்கானது 0.34 ரூபாயில் இருந்து, 15.62 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 4500 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.

முதலீட்டின் நிலவரம்: இந்த மல்டிபேக்கர் பென்னி பங்கினில் கடந்த 1 மாதத்திற்கு முன்பாக 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 1.05 லட்சம் ரூபாயாகும். இதே 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் முதலீடு செய்திருந்தால், இன்று அது 1.25 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே ஆறு மாதங்களுக்கு முன்பாக 1 லட்சம் ரூபாயாக முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பி 2.75 லட்சம் ரூபாயாகும்.
1 வருடத்துக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 17 லட்சம் ரூபாயாகும். இதே 4 வருடத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 46 லட்சம் ரூபாயாகும்.

ஆராய்ந்து முதலீடு செய்யணும்: பென்னி பங்குகள் என்றாலும், நல்ல நிறுவனம், அதன் தேவை, அதன் பேலன்ஸ் சீட் என பல காரணிகளையும் கவனித்து போன்ற பங்குகளை அலசி ஆராய்ந்து வாங்குவது நல்லது. ஏனெனில் சில நேரங்களில் உங்கள் முதலீடு எதிராக திரும்பவும் வாய்ப்பிருப்பதால், சரியாக அலசி ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும்.
More From GoodReturns

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications