ரூ.0.35ல் இருந்து ரூ.150.. பலமடங்கு லாபம் கொடுத்த மல்டி பேக்கர் பங்கு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

லட்சக்கணக்கில் லாபம் கொடுத்த ஃப்ளோமிக் குளோபல் லாஜிஸ்டிக்ஸ் பங்கினை பற்றி பார்க்கும் முன்பு, பென்னி ஸ்டாக் என்றால் என்ன என்பதை தான் பார்க்க இருக்கிறோம்.

பென்னி ஸ்டாக் என்பது மிகக் குறைந்த விலையில் வர்த்தகமாகும் ஒரு பங்கு. இதன் சந்தை மூலதனமும் குறைவாக இருக்கும். உதாரணத்திற்கு இந்தியாவில் 0.05 ரூபாயில் இருந்து, 10 ரூபாய் வரையில் இந்த பென்னி பங்குகள் வர்த்தகமாகி கொண்டுள்ளன.

அப்படி ஒரு பென்னி ஸ்டாக் ஆக இருந்தது தான் ஃப்ளோமிக் குளோபல் லாஜிஸ்டிக்ஸ் பங்கு. ஆனால் இன்று இது நல்லதொரு லாபத்தினை கொடுத்துள்ளது எனலாம்.

பென்னி ஸ்டாக்கினை வாங்கலாமா?

பென்னி ஸ்டாக்கினை வாங்கலாமா?

எனினும் எல்லா பென்னி பங்குகளும் இதேபோல இருக்காது. அப்படி நீங்கள் ஒரு பென்னி ஸ்டாக்கினை வாங்க நினைக்கிறீர்கள் எனில், அதனை தெளிவாக ஃபண்டமெண்டல் ரீதியாக ஏற்றம் காணலாம் என்ற நிலையில், அதில் முதலீடு செய்யலாம். ஆனால் இந்த பங்குகள் பெரியளவில் ஏற்றம் காண வாய்ப்புள்ளதா? இந்த பங்கினை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

பலமடங்கு பெருகிய முதலீடு

பலமடங்கு பெருகிய முதலீடு

கடந்த மார்ச் 2019ல் இந்த பங்கில் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 4 கோடி ரூபாய்க்கும் மேல்.
ஃப்ளோமிக் குளோபல் லாஜிஸ்டிக்ஸ் பங்கானது கடந்த 2.5 ஆண்டுகளில் 43,000% ஏற்றத்தினை கண்டுள்ளது. மார்ச் 28, 2019 நிலவரப்படி 0.35 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, இன்று 150.40 ரூபாயாக இருந்தது. இது பி.எஸ்.இ-யில் 42,871% ஏற்றம் கண்டுள்ளது.

சென்செக்ஸ் உடன் ஒப்பீடு

சென்செக்ஸ் உடன் ஒப்பீடு

சென்செக்ஸ் இந்த காலகட்டத்தில் 57.71% ஏற்றம் கண்டுள்ளது. இன்று மட்டும் இந்த பங்கின் விலையானது 5% அதிகரித்து, 157.90 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த அமர்விலும் 5% ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பி.எஸ்.இ-யில் 4.99% அதிகரித்து, 157.90 ரூபாயாக உள்ளது. இன்றைய உச்ச விலை 157.90. இன்றைய குறைந்த பட்ச விலை 157.90 ரூபாயாகவும் உள்ளது. இது அப்பர் சர்கியூட் ஆகியுள்ள நிலையில், விலையில் மாற்றமில்லாமல் காணப்படுகின்றது.

52 வார உச்ச விலை

52 வார உச்ச விலை

இந்த பென்னி பங்கி 52 வார உச்ச விலையானது 216.30 ரூபாயாகும். குறைந்தபட்ச விலை 1.26 ரூபாயாகும்.
இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது டெக்னிக்கலாக 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் மேலாக காணப்படுகின்றது. எனினும் 5 நாள், 20 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கும் கீழாக உள்ளது.

ஓராண்டு பங்கு நிலவரம்

ஓராண்டு பங்கு நிலவரம்

இதன் சந்தை மூலதனம் 113 கோடி ரூபாயாக காணப்படுகின்றது.

இந்த பென்னி பங்கின் விலையானது நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து 7,773% அதிகரித்துள்ளது. இது கடந்த ஒரு ஆண்டில் 12,029% அதிகரித்துள்ளது.

இந்த நிறுவனத்தின் இரண்டு புரோமோட்டார்கள் 27.49% பங்கினையும், பொது பங்குதாரர்கள் 72.51% வைத்துள்ளனர். 536 பொது பங்குதாரர்கள் 52.20 லட்சம் பங்குகளை வைத்துள்ளனர்.

 

இரண்டாவது காலாண்டில் நிகரலாபம்

இரண்டாவது காலாண்டில் நிகரலாபம்

இந்த பங்கின் விலையானது எதிர்பாராத அளவு அதிகரித்து காணப்பட்டாலும், இந்த நிறுவனம் இரண்டாவது காலாண்டில் நிகர லாபமானது குறைந்து 0.70 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டில் 0.85 கோடி ரூபாயாக இருந்தது.
இதே கடந்த நிதியாண்டில் 2.47 கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய நிதியாண்டில் 0.05 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+