Multibagger Stock: இந்திய பங்கு சந்தையானது கடந்த ஆண்டில் பெரியளவிலான ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், முடிவில் ஏற்றத்திலேயே முடிவடைந்தது. இந்த போக்கு நடப்பு ஆண்டிலும் தொடர்ந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் பென்னி பங்குகளிலும் ஏற்ற இறக்கம் என்பது அதிகளவில் இருந்து வருகின்றது.
இந்த ஏற்ற இறக்கத்தின் மத்தியிலும் ஒரு வருடத்தில் பென்னி பங்கானது மல்டிபெக்கர் பங்காக மாறியுள்ளது எனலாம்.
பொதுவாக பென்னி பங்குகளை பொறுத்தவரையில் ஆபத்தான பங்குகளாகவே பார்க்கப்படுகிறது.
பென்னி பங்கு
ஆக பென்னி பங்குகளில் முதலீடு செய்பவர்கள் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் எனலாம். சில பங்குகள் பங்கின் விலை பெரிதில்லை. ஆனால் அது கொடுக்கும் லாபம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. அப்படி கடந்த 1 ஆண்டில் மிகப்பெரிய அளவில் லாபம் கொடுத்த பென்னி பங்கு கைசர் கார்ப்பரேஷன்.
5200% ஏற்றம்
கடந்த ஆண்டில் முதலீட்டாளர்களை மல்டிபேக்கர் ஆக்கிய பங்குகளில் கைசர் கார்ப்பரேஷனும் ஒன்று. பி எஸ் இ-யில் பட்டியலிடப்பட்ட இந்த பங்கின் சந்தை மதிப்பு 275 கோடி ரூபாயாகும். இந்த பங்கானது 2021ல் 1 ரூபாய்க்கு அருகில் காணப்பட்டது. தற்போது 5100% அதிகரித்து, 52.25 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
மல்டிபேக்கர் சான்ஸ்
கடந்த 6 மாதத்தில் இந்த மல்டிபேக்கர் பென்னி பங்கானது செல்லிங் அழுத்தத்திலேயே காணப்பட்டது. இதே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3.50% அளவுக்கு சரிவில் காணப்பட்டது. இதே கடந்த 1 மாதத்தில் இப்பங்கின் விலையானது சுமார் 9% சரிவிலும். இதே கடந்த ஆறு மாதத்தில் 98 ரூபாயில் இருந்து 52.25 ரூபாயாகவும் சரிவினைக் கண்டுள்ளது. எப்படியிருப்புனும் 2022ல் இந்த பென்னி பங்கானது 3.50 ரூபாயில் இருந்து, 55 ரூபாய் என்ற அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.
லட்சங்களில் வருமானம்?
உதாரணத்திற்கு நவம்பர் 2021ல் இப்பங்கின் விலையானது 1 ரூபாய் என்ற லெவலில் இருந்தபோது 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், ஜனவரி 6, 2023ல் 52 ரூபாய் என்ற லெவலில் காணப்பட்டது. இதன் மூலம் உங்களது முதலீடு 52 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும். இந்த பங்கு விலையானது இந்த காலகட்டத்தில் 5100% லாபத்தில் காணப்படுகின்றது.
முதலீட்டின் தாக்கம்
1 மாதத்திற்கு முன்பு இந்த மல்டிபேக்கர் பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், தற்போது அதன் மதிப்பு சுமார் 91,000 ரூபாய். இதே 6 மாதங்களுக்கு முன்பாக முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 55,000 ரூபாய். இதே 2021ன் இறுதியில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 22 லட்சம் ரூபாயாகும்.
இதே நவம்பர் 2021ல் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 52 லட்சம் ரூபாயாகும்.
52 வார லெவல்
இந்த மல்டிபேக்கர் பென்னி பங்கானது பிஎஸ்இ-யில் மட்டும் இருக்கும் ஒரு பங்காகும். இந்த பங்கின் 52 வார உச்ச விலையானது 130.55 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 3.21 ரூபாயாகும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications