பங்கு சந்தை முதலீட்டில் சரியான பங்குகளை தேர்வு செய்தால் அதன் மூலம் மிகப்பெரிய லாபத்தினை அடைய முடியும். எனினும் நீங்கள் சரியான பங்கினை தேர்வு செய்வது மிக அதிகம். உங்கள் பணத்தினை வளர வைக்க பல வழிகள் உண்டு.
குறிப்பாக பங்கு ஏற்றத்தின் மூலம் லாபம், டிவிடெண்ட் மூலம் லாபம், பங்குகளை திரும்ப பெறுதல், போனஸ் பங்குகள் உள்ளிட்ட பலவற்றின் மூலம் லாபம் பார்க்க முடியும்.
இதனால் உங்கள் முதலீடானது தொடர்ச்சியாக வளர்ச்சி காணும் எனலாம். நீங்கள் உங்களது போர்ட்போலியோவில் வைத்திருக்கும் ஒரு பங்கினை பற்றிய ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகினால், அது சந்தைக்கு சாதகமாக இருக்கலாம்.
பல லட்சம் லாபம்
அப்படி சில பங்குகளில் விப்ரோ நிறுவனம் நீண்டகால நோக்கில் பல வகையிலும் வாய்ப்புகளை கொடுத்துள்ளது. இது போனஸ், நீண்டகால முதலீடு என பல காரணிகளுக்கும் மத்தியில் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது. முன்னணி ஐடி நிறுவனமான இந்த பங்கினில் 1 வருடத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அது 36 லட்சம் ரூபாயாக வளர்ந்திருக்கும்.
விப்ரோ பங்கு வரலாறு
மார்ச் 2009ல் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது 50 ரூபாய் என்ற லெவலுக்கு அருகில் இருந்தது. ஆனால் இன்று ஒரு பங்குக்கு 412.35 ரூபாயாக உள்ளது. இது நீண்டகால நோக்கில் லாபகரமான ஒன்றாகவும் உள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் நல்ல ஏற்றத்தினை கண்டது. இது கடந்த ஜூன் 2010, ஜுன் 2017, மார்ச் 2019, ஜூன் 2010ல் போனஸ் பங்குகளை அறிவித்தது.
போனஸ் அறிவிப்பின் தாக்கம்
நீண்டகால நோக்கில் இந்த பங்கினில் 1 லட்சம் ரூபாய் 14 ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு செய்திருந்தால், தற்போது அது பல மடங்காகி இருக்கும். விப்ரோவின் பங்கு 2009ல் ஒரு பங்கு விலை 50 ரூபாயாக இருந்தது. 1 லட்சம் ரூபாய்க்கு 2000 பங்குகளை நீங்கள் வாங்கியிருப்பீர்கள். இது போனஸ் அறிவிப்புக்கு மத்தியில் உங்கள் வசம் 3332 பங்குகளும், 2017ல் 6664 பங்குகளும், அதன் பிறகு 8885 பங்குகளும் இருந்திருக்கும். மொத்தத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், போனஸ் சேர்த்து 8885 பங்குகள் வசம் இருந்து இருக்கும்.
தற்போதைய நிலவரம்?
தற்போது விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலை ஒரு பங்குக்கு 412.35 ரூபாயாக இருந்தது. இதன் மதிப்பு 412.35*8885 என்று கணக்கிட்டால், இன்றைய மதிப்பு 36.63 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும்.
பங்கு விலை நிலவரம்?
கடந்த அமர்வில் விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது என் எஸ் இயில் 0.31% குறைந்து, 412.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே பி எஸ் இ-யில் இந்த பங்கின் விலையானது 0.30% குறைந்து, 412.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 726.70 ரூபாயாகும். இதன் 52 குறைந்தபட்ச விலை 372.40 ரூபாயாகும்.
டெக்னிக்கல் பேட்டர்ன்?
டெக்னிக்கலாக 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாளுக்கு மேலாக இருந்து வருகின்றது. இதன் முக்கிய சப்போர்ட் லெவலாக 411 ரூபாயினை நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், வரும் வாரத்தில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கலாம். சமீபத்திய காலாண்டுகளாக ஐடி துறையில் தேவையானது அதிகரிக்க தொடங்கினால், அது மீண்டும் மீண்டு வரத் தொடங்கலாம். எப்படியிருப்பினும் நடப்பு ஆண்டில் இதுவரையில் 42.34% சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த 1 ஆண்டில் 36.24% சரிவினைக் கண்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications