3150% ஏற்றம்.. 6 மாதத்தில் பலமடங்கு லாபம் கொடுத்த மல்டி பேக்கர் பங்கு..!

பொதுவாக பென்னி பங்குகள் என்றாலே அது ரிஸ்கான முதலீடு, அதில் முதலீடு செய்வது என்பது ஆபத்தானது என்று பொதுவான கருத்து உண்டு. ஆனால் சமீபத்திய காலத்தில் இதெல்லாம் உண்மையல்ல என்னும் அளவுக்கு லாபத்தினை வாரிக் கொடுத்துள்ளது.

அதற்கு சிறந்த உதாரணம் ராதே டெவலப்பர்ஸ் நிறுவனம் தான். ஏனெனில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் இந்த பென்னி பங்கின் விலையானது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

இதன் மூலம் லாபமும் அதிகரித்துள்ளது. ஒரு பென்னி பங்கினை வாங்கும் முன்பு அதன் எதிர்காலம் எப்படியிருக்கும்? இதனை வாங்கலாமா? வேண்டாமா? எதனால் இந்த பங்கின் விலை இந்தளவுக்கு சரிவில் உள்ளது என்பனவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது.

ஒரு மாத நிலவரம்

ஒரு மாத நிலவரம்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த பங்கின் விலையானது 9% அதிகரித்துள்ளது. இது 309.60 ரூபாயில் இருந்து 338 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஒரு மாதத்தில் இந்த பங்கின் விலையானது 190 ரூபாயில் இருந்து, 338 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 77% அதிகரித்துள்ளது.

ஆறு மாத நிலவரம்

ஆறு மாத நிலவரம்

கடந்த ஆறு மாதத்தில் 10.40 ரூபாயில் இருந்து 338 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இந்த ஆறு மாத காலகட்டத்தில் 3,150% ஏற்றம் கண்டுள்ளது.

இந்த காலத்தில் இந்த பங்கில் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு வேற லெவல்.

முதலீட்டின் நிலை

முதலீட்டின் நிலை

முதலீட்டாளர் ஒருவர் ஒரு வாரத்திற்கு முன்பாக இந்த பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 1.09 லட்சம் ரூபாயாகும்.

இதே ஒரு மாதத்திற்கு முன்பு இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு 1.77 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கலாம்.

ஆறு மாத நிலவரம்

ஆறு மாத நிலவரம்

இந்த பங்கினில் 6 மாதத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 32.50 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும்.

எனினும் அனைத்து பென்னி பங்குகளும் இதே போல் ஏற்றம் காணும் என்ற எண்ணத்தில் வாங்கி வைக்கவும் கூடாது. அதனை பற்றியும் சற்று யோசிக்க வேண்டும்

இன்றைய நிலவரம்

இன்றைய நிலவரம்

ராதே டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது பிஎஸ்இ-ல் 1.52% குறைந்து, 333 ரூபாயாக சரிவில் தற்போது காணப்படுகிறது. இதன் இன்றைய உச்ச விலை 340 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 321.25 ரூபாயாகும். இதே இதன் இன்றைய 52 வார உச்ச விலை 360 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 7.84 ரூபாயாகும்.

Disclaimer: ஒரு பென்னி பங்கினை வாங்கும் முன்பு அதன் எதிர்காலம் எப்படியிருக்கும்? இதனை வாங்கலாமா? வேண்டாமா? எதனால் இந்த பங்கின் விலை இந்தளவுக்கு சரிவில் உள்ளது என்பனவற்றை முழுமையாக தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+