ரூ.100 டூ 42,000... ரூ.1 லட்சம் முதலீடு.. கோடிக் கணக்கில் வருமானம்..உங்க போர்ட்போலியோவில் இருக்கா?

பொதுவாக பங்கு சந்தையில் நீண்டகால முதலீடுகள் என்பது லாபகரமான ஒன்றாகத் தான் இருந்து வருகின்றன. எனினும் நீங்கள் சரியானதொரு பங்கினை தேர்வு செய்திருந்தால், நிச்சயம் ஒரு லாபம் பார்க்க முடியும் என்பதற்கு இந்த பதிவே சாட்சி.

எனினும் இதற்கு முதலீடு என்பதை காட்டிலும், நீங்கள் தேர்வு செய்யும் பங்கு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்து உங்களின் பொறுமை.

பலரும் தாங்கள் வாங்கிய பங்கின் விலையானது வாங்கிய விலையை விட சற்று குறைந்தாலும், பதற்றமாகத் தொடங்கி விடுவர். அதன்பிறகு நஷ்டத்தில் வெளியே வந்து விடுவர். ஆனால் அது குறுகிய காலத்தில் நல்ல லாபகரமான பங்காக மாறியிருக்கும்.

கவனியுங்கள்

கவனியுங்கள்

ஆக ஒரு பங்கின நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கிறீர்கள் எனில், அதனை ஏன் வாங்க வேண்டும். அதன் எதிர்காலம் எப்படி இருக்கும். அதனை வாங்குவதற்கு முன் இது சரியான காலம் தானா? போட்டி தன்மை எப்படியுள்ளது. அந்த நிறுவனத்தின் கடன், மார்ஜின் விகிதம், ஒப்பந்தங்கள் என சகலத்தினையும் கவனிக்க வேண்டும்.

என்ன  பங்கு அது?

என்ன பங்கு அது?

இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்கு, ஹனிவெல் ஆட்டோமேஷன் இந்தியா லிமிடெட். இது லார்ஜ் கேப் நிறுவனத்தை சார்ந்த ஒரு பங்காகும். இது ஐடி துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.

இப்பங்கினில் 23 வருடங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 4.5 கோடி ரூபாயாக இருந்திருக்கும்.

கடனில்லா நிறுவனம்

கடனில்லா நிறுவனம்

இந்த லார்ஜ் கேப் நிறுவனம் நல்ல செயல்பாடுகளை கொண்டுள்ள அதே வேளையில் கடனில்லா ஒரு நிறுவனமாகவும் உள்ளது.

கடந்த செப்டம்பர் 1, 2017ம் ஆண்டில் 13,334.05 ரூபாயாக இருந்த பங்கின் விலை, இன்று இந்த 42,275 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 214.22% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஒராண்டில் 7.16% ஏற்றம் கண்டுள்ளது.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

நடப்பு ஆண்டில் இதுவரையில் 1.4% குறைந்தும், கடந்த 6 மாதங்களில் 3.85% அதிகரித்தும், கடந்த 1 மாதத்தில் 11.35% அதிகரித்தும், கடந்த 5 அமர்வுகளில் 3.85% ஏற்றம் கண்டும் முடிவடைந்துள்ளது.

இப்பங்கானது சற்று தடுமாற்றத்தில் காணப்பட்டாலும் 5 நாள் மூவிங் ஆவரேஜ்-க்கு கீழாக காணப்படுகிறது. எனினும் 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள்ம் 200 நாள் மூவிங் ஆவரேஜ்-க்கும் மேலாக காணப்படுகின்றது.

இதன் காலாண்டு முடிவு எப்படி?

இதன் காலாண்டு முடிவு எப்படி?

கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 101.97 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 91.53 கோடி ரூபாயாக இருந்தது. இது 11.4% அதிகரித்துள்ளது.

இதே இதன் செயல்பாட்டு வருவாய் விகிதமானது 15% அதிகரித்து, 786.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 683.20 கோடி ரூபாயாக உள்ளது. இதன் லாபம் அதிகரித்துள்ள அதே வேலையில் இதன் செலவினமும் 16.61% அதிகரித்து, 678.01 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

வாங்கலாமா?

வாங்கலாமா?

இந்த நிறுவனம் வலுவான செயல்பாடுகளை கொண்டுள்ள நிலையில், கடந்த ஆண்டினை காட்டிலும் அதன் ஆர்டர் புக்கில் ஒப்பந்தம் அதிகரித்துள்ளது. கடனும் இல்லாத நிலையில், நிதி நிலையும் சாதமாக உள்ளது. பல்வேறு அரசு ஒப்பந்தங்கள், முதலீடு, உள்கட்டமைப்பு துறையில் வளர்ச்சி, விமான நிலையம், ரயில்வே, கப்பல் என பல துறையிலும் ஆட்டோமேஷன் வளர்ச்சி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இப்பங்கினை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இதன் நீண்டகால இலக்கு விலையாக 49,750 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளனர்.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரப்படி இப்பங்கின் விலையானது சந்தை முடிவில், என் எஸ் இ-யில் 2.75% குறைந்து, 41,836.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 42,275.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 30,185.35 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலை 2.43% குறைந்து, 41,980.95 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் 47,400 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 30,162 ரூபாயாகும்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+