மும்பை: யஷோ இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சமீப ஆண்டுகளாக இந்திய பங்கு சந்தையில் கடந்த சில ஆண்டுகளாகவே மல்டிபேக்கர் பங்காக உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக சற்றே அழுத்தத்தில் இருந்தாலும், அதன் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தினை வாரி வழங்கியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இந்த கெமிக்கல் மல்டிபேக்கர் பங்கானது 100 ரூபாயில் இருந்து 365 ரூபாய் என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது. இது கிட்டதட்ட 1250% ஏற்றம் கண்டுள்ளது. ஆக நீண்டகால முதலீட்டாளர்களுக்கு இது மிகப்பெரிய லாபத்தினை கொடுத்துள்ளது எனலாம்.
பங்கு வரலாறு என்ன?
யஷோ இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலையானது கடந்த 6 மாதங்களில் இப்பங்கின் விலையானது 12% சரிவினைக் கண்டுள்ளது. இதே ஒரு வருடத்தில் 25% குறைந்துள்ளது.
எப்படியிருப்பினும் நிதி சந்தையானது நீண்டகால நோக்கில் மீண்டும் முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இந்த கெமிக்கல் பங்கானது நீண்டகால நோக்கில் வாங்கி ஹோல்டு செய்யலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2 ஆண்டுகளில் எவ்வளவு?
அஷீஷ் கச்சோலியாவின் போர்ட்போலியோவில் உள்ள தரமான பங்குகளில் இதுவும் ஒன்று. இது நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கொடுத்த பங்கு. குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு நல்ல ஏற்றம் கண்டது. கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கின் விலையானது 125% லாபம் கொடுத்துள்ளது.
இதே கடந்த 5 ஆண்டுகளில் இந்த மல்டிபேக்கர் கெமிக்கல் பங்கின் விலையானது, ஒரு பங்குக்கு 100 - 365 ரூபாய் ஒரு பங்குக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் 1250% லாபத்தினை லாபம் கொடுத்துள்ளது.
5 ஆண்டு நிலவரம்?
இப்பங்கினில் 1 லட்சம் ரூபாய் 6 மாதங்களுக்கு முன்பு முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 88,000 ரூபாயாக குறைந்துள்ளது. இதே 1 வருடத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று 75000 ரூபாயாக குறைந்திருக்கலாம்.
இதே 2 வருடத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு, 2.25 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும். இதே 5 ஆண்டுகளில் 1 லட்சம் ரூபாய் 13.50 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும்.
அஷீஷ் கச்சோலியா
ஷேர் ஹோல்டிங் பேட்டர்ன் அறிக்கையின் படி, யஷோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் டிசம்பர் 2022 காலாண்டில் அஷீஷ் கச்சோலியாவின் வசம் 4,35,350 பங்குகள் அல்லது 3.82% இருந்தது.
இது செப்டம்பர் 2022 காலாண்டில் 2,96,322 பங்குகள் அல்லது 2.60% இருந்தது. தொடர்ந்து இந்த பங்கினை விலை குறைந்திருந்தாலும், அஷீஷ் கச்சோலியா தனது போர்ட்போலியோவில் இந்த பங்கினை அதிகரித்துள்ளார்.
இன்றைய பங்கு நிலவரம்?
பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 1.80% குறைந்து, 1350 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 1395 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 1350 ரூபாயாகவும் உள்ளது.
இதன் 52 வார உச்ச விலை 2050 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 1172 ரூபாயாகவும் உள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications