ரூ.134 டூ ரூ.1025.. மல்டிபேக்கர் பங்கு கொடுத்த செம லாபம்.. !

ஏபிஎல் (APL) அப்பல்லோ டியூப்ஸ் பங்கு விலையானது கடந்த மூன்று ஆண்டுகளில் 661% ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2, 2019ல் 134.67 ரூபாயாக இருந்த பங்கு விலையானது, இன்று 1025.60 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.

இப்பங்கினில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 7.61 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கும்.

சென்செக்ஸ் ஏற்றம்

சென்செக்ஸ் ஏற்றம்

இந்த காலகட்டத்தில் சென்செக்ஸ் 58% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கின் விலையானது ஒன்று 1025.60 ரூபாய் என்ற உச்சத்தினையும் எட்டியுள்ளது. இது கடந்த அமர்வில் 980.60 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏபிஎல் அப்பல்லோ பங்கு விலையானது கடந்த இரண்டு நாட்களாக சரிவினைக் கண்ட நிலையில், இன்று ஏற்றம் கண்டுள்ளது.

டெக்னிக்கலாக எப்படி ஏற்றம்?

டெக்னிக்கலாக எப்படி ஏற்றம்?

இப்பங்கின் விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள் மற்றும் 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக ஏற்றம் கண்டுள்ளது.

இதே ஒரு ஆண்டில் இப்பங்கின் விலையானது 16% அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 20% ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே இந்த ஆண்டில் 0.23% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலையானது 20% ஏற்றம் கண்டுள்ளது.

52 வார உச்சம்

52 வார உச்சம்

இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 25,410 கோடி ரூபாயாக உள்ளது. இந்த பங்கின் விலை 52 வார உச்சமானது டிசம்பர் 16,2021ல் 1113.65 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. இதே ஆகஸ்ட் 24 2021ல் இப்பங்கின் விலையானது 742.50 ரூபாயாக தொட்டிருந்தது.

புரோமோட்டர்களின் பங்கு விகிதம்

புரோமோட்டர்களின் பங்கு விகிதம்

புரோமோட்டார்ஸ்-ன் பங்கு விகிதமானது முதல் காலாண்டு மற்றும் கடைசி காலாண்டில் 34.52% ஆக இருந்தது. பொது மக்களின் வசம் 65.48% ஆக உள்ளது. மார்ச் காலாண்டில் 65.48% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் வசம் இருக்கும் பங்கு மதிப்பும் இதுவரையில் மாறவில்லை.

அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளார்கள்

அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளார்கள்

முந்தைய நிதியாண்டில் மார்ச் காலாண்டில் 199 ஆக இருந்த அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளார்களின் எண்ணிக்கையானது. கடந்த ஜூன் காலாண்டில் முதலீட்டாளார்களின் எண்ணிக்கையானது 210 ஆகவும் அதிகரித்துள்ளது.

பங்குதாரர்கள் வசம்

பங்குதாரர்கள் வசம்

1,48,712 பொது பங்குதாரர்கள் வசம் 3.43 கோடி பங்குகள் உள்ளன. இதே 13.74% பங்குதாரர்கள், 2 லட்சம் ரூபாய் வரையில் தனி நபர் பங்கு மூலதனத்தினை கொண்டுள்ளனர்.

19 பொது பங்குதாரர்கள் நிறுவனத்தின் 36.46 லட்சம் பங்குகளை வைத்துள்ளனர். இதே 1.46% பங்குகளை 2 லட்சத்திற்கும் அதிகமான தனி நபர் பங்கு மூலதனத்துடன் கொண்டுள்ளது.

போட்டியாளர்களின் நிலை

போட்டியாளர்களின் நிலை

இப்பங்கின் விலையானது அதன் போட்டியாளார்களுடன் ஒப்பிடும்போது நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் செயில் பங்கு விலையானது 3 ஆண்டுகளில் 89.12% ஏற்றம் கண்டுள்ளது. இதே ஹிண்டால்கோ பங்கு விலையானது 138% ஏற்றம் கண்டுள்ளது. டாடா ஸ்டீல் பங்கு விலையானது 165% ஏற்றம் கண்டுள்ளது. இதே ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல் பங்கு விலையானது 194.51% ஏற்றம் கண்டுள்ளது.

நிகரலாபம்

நிகரலாபம்

இந்த நிறுவனத்தின் நிகரலாபம் மார்ச் காலாண்டில் 557.29 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 148.25 கோடி ரூபாயாக இருந்தது. இதே செயல்பாட்டின் மூலம் கிடைத்த லாபம் 985.76 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2019ம் நிதியாண்டில் 404.55 கோடி ரூபாயாக இருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+