Multibagger Stock: என் எஸ் இ-யில் அதன் வாழ் நாள் உச்சமான 1975.80 ரூபாயாக உயர்ந்த பிறகு, மல்டிபேக்கர் பங்கான செல் உற்பத்தி நிறுவனம் (SEL Manufacturing) செல்லிங் அழுத்தத்தில் காணப்படுகிறது.
இந்த ஸ்மால் கேப் நிறுவனம் கடந்த 6 மாதத்தில் 40%-க்கும் அதிகமாக சரிவில் காணப்படுகின்றது.
மல்டிபேக்கர் பங்கு என்பதை விட, மல்டிபேக்கர் பென்னி பங்கு என்று கூறலாம். இது கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.25 ரூபாயில் இருந்து, 554.10 ரூபாய் என்ற லெவலுக்கு உச்சம் தொட்டுள்ளது.
பங்கு வரலாறு?
இந்த ஸ்மால் கேப் பங்கு விலையானது ஏப்ரல் 2022ல் இருந்து செல்லிங் அழுத்தத்திலேயே காணப்படுகிறது. எனினும் இந்த அழுத்தத்திற்கு முன்பு மிகப்பெரிய அளவில் ஏற்றம் இருந்தது எனலாம். கடந்த ஒரு மாதத்தில் இந்த மல்டிபேக்கர் பங்கானது 15% சரிவினைக் கண்டுள்ளது. இதே கடந்த 6 மாதத்தில் இந்த மல்டிபேக்கர் பங்கானது 925 ரூபாய் என்ற லெவலில் இருந்து, 554 ரூபாய் என்ற லெவலுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
6 மாத நிலவரம்?
எப்படியிருப்பினும் கடந்த 6 மாதத்தில் 40% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. எப்படியிருப்பினும் கடந்த 1 ஆண்டில் மட்டும் 750% லாபம் கொடுத்துள்ளது.
கடந்த ஜனவரி 2021ல் இந்த மல்டிபேக்கர் பென்னி பங்கின் விலையானது 2.25 ரூபாயாக முடிவடைந்திருந்தது. அதன் பிறகு ஏற்றம் காண ஆரம்பித்த இந்த பங்கானது இன்று 554 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது.
2 ஆண்டு நிலவரம்
இதே கடந்த 2 ஆண்டுகளில் இந்த மல்டிபேக்கர் பங்கின் விலையானது, 24,500% அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 1 மாதத்திற்கு முன்பு இந்த பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், இன்று அதன் மதிப்பானது, 85,000 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே 6 மாதத்திற்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், இன்று அதன் மதிப்பு 60,000 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
பென்னி பங்கு டூ மல்டிபேக்கர் பங்கு
இதே 1 வருடத்திற்கு முன்பு ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், இன்று அதன் மதிப்பு 8.50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும். இதே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இதன் மதிப்பு 2.46 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கும். ஒரு மிகச்சிறிய அளவிலான பென்னி பங்கு இன்று பல மல்டிபேக்கர் வாய்ப்பினை கொடுத்துள்ளது எனலாம்.
சந்தை மதிப்பு
இந்த பங்கு என் எஸ் இ மற்றும் பி எஸ் இ என இரண்டு சந்தைகளிலும் வர்த்தகமாகி வருகின்றது. இதன் சந்தை மதிப்பு 1835 கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதன் சந்தையானது மீண்டும் ஏற்ற இறக்கம் அதிகரிக்க வழிவகுக்கலாம்.


Click it and Unblock the Notifications