ரூ.213 - ரூ2335.. மூன்று வருடத்தில் மல்டி பேக்கர் பங்கு கொடுத்த லாபம் எவ்வளவு தெரியுமா.. !

நீண்டகாலத்துக்கு முதலீடு என்பது பலதரப்பு நிபுணர்களும் சொல்லும் ஒரே சிறந்த ஆலோசனை. ஏனெனில் இதில் ரிஸ்க் குறைவு. எதிர்பார்க்கும் லாபத்தினை அடைய சிறந்த வழியாகும். மொத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் லாபகரமான முதலீடாக இருக்கும்.

அப்படி நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும், இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி சரியான பங்கினை தேர்வு செய்தால், அது பல மடங்கு லாபத்தினை கொடுக்கும்.

இதில் ஒரு சில ஆண்டுகளுக்கு எதிர்மறையான லாபமாக இருந்தாலும், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது சிறந்த லாபகரமானதாக இருக்கும். மொத்தத்தில் பங்கு சந்தையில் நீண்டகால முதலீடுகளே பெஸ்ட் ஆப்சன் எனலாம்.

தீபக் நைட்ரேட்

தீபக் நைட்ரேட்

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது தீபக் நைட்ரேட் நிறுவனத்தின் பங்கினை பற்றித் தான்.

தீபக் நைட்ரேட் ஒரு கெமிக்கல் நிறுவனமாகும். சர்வதேச அளவில் பல்வேறு வகையான கெமிக்கல்களை விற்பனை செய்து வருகிறது. கெமிக்கல்களுக்கான தேவையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போதுமான அளவுக்கு சப்ளை இல்லை எனலாம். மேலும் இந்த துறையில் போட்டியானது குறைவாகவே உள்ளது.

மூன்று ஆண்டு நிலவரம்

மூன்று ஆண்டு நிலவரம்


கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நிறுவன பங்கின் விலையானது 984% அதிகரித்துள்ளது. இது கடந்த டிசம்பர் 24, 2018 அன்று 212.9 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 2330 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல். இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் வெறும் 61.2% மட்டுமே ஏற்றத்தில் காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

NSEல் இன்றைய பங்கு விலையானது சற்று குறைந்து, 2310.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 2339.80 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2281 ரூபாயாகும்.

இதே BSEல் சற்று அதிகரித்து, 2319 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 2335.20 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2283 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 3020 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 882.20 ரூபாயாகும்.

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 31,545 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த பங்கின் விலையானது கடந்த ஒராண்டில் மட்டும் 144.98 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 154.23% அதிகரித்துள்ளது. இதே ஒரு மாதத்தில் 7% அதிகரித்துள்ளது.

டெக்னிக்கல் பேட்டர்ன்

டெக்னிக்கல் பேட்டர்ன்

இந்த பங்கின் விலையானதுன் 5 நாள், 20 நாள், 200 நாள் மூவிங் ஆவ்ரேஜ்ஜீக்கும் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் 50 நாள், 100 நாள் கீஆவரேஜ்ஜீக்கும் கீழாக வர்த்தகமாகி வருகின்றது.

டெக்னிக்கலாக இப்படி எனில், இந்தியாவைப் பொறுத்தவரையில் அதிக அளவிலான கெமிக்கல்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. ஏற்கனவே சீனாவில் சுற்றுச் சூழலை சரி செய்யும் விதமாக பல கெமிக்கல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை குறைத்துள்ளன.

லாபம் எவ்வளவு?

லாபம் எவ்வளவு?

இந்த நிறுவனத்தின் லாபமானது செப்டம்பர் காலாண்டில் 956% அதிகரித்து, 151.32 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 12.37 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே இதன் நிகர விற்பனையானது 60.28% அதிகரித்து, 517 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 322 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+