எக்ஸ்ப்ரோ இந்தியா பங்கு விலையானது கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2,500% ஏற்றம் கண்டுள்ளது.
இந்த பங்கின் விலையானது கடந்த ஆண்டு ஜனவரி 4 அன்று 36.20 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, இன்று 940 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
கடந்த 12 மாதங்களில் இந்த பங்கானது 2,469% வருவாயினை கொடுத்துள்ளது. இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 23.61% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சங்களில் லாபம்
இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், ஒரு வருடத்தில் 25.96 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த ஸ்மால் கேப் பங்கானது இன்று 891 ரூபாயாக குறைந்தபட்ச விலையினை தொட்டுள்ளது. இது கடந்த அமர்வின் முடிவு விலையுடன் ஒப்பிடும்போது 4.94% சரிவினைக் கண்டுள்ளது. கடந்த அமர்வில் 937.35 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெக்னிக்கல் பேட்டர்ன்
இந்த பங்கின் விலையானது 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இதே 5 நாள், 20 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது.
இந்த பங்கின் விலையானது அதன் 52 வார உச்சமான 1015 ரூபாயினை கடந்த டிசம்பர் 8, 2021 அன்று தொட்டது. இதே அதன் 52 வார குறைந்தபட்ச விலை 34.50 ரூபாயினை தொட்டது.
விற்பனை அதிகரிப்பு
இந்த நிறுவனத்தின் விற்பனையானது 5.22% அதிகரித்து, 373.35 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 354.84 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே செப்டம்பர் காலாண்டில் விற்பனை 29.58% அதிகரித்து, 126.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 97.66 கோடி ரூபாயாக இருந்தது.
என்ன செய்கிறது?
எக்ஸ்ப்ரோ இந்தியா பிர்லா குழுமத்தினை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இது கேப்பாசிட்டர்களை பேக்கேஜிங் செய்யும் மெட்டீரியல்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாகும். இந்த வணிகத்திற்கு மூலதனம் அதிகம் என்பதால் போட்டியாளர்கள் யாரும் இல்லை. ஆக இந்த பங்கின் விலையானது அதிகரிக்கலாம்.
இன்றைய பங்கு விலை
எக்ஸ்ப்ரோ இந்தியா லிமிடெட் நிறுவனம் என் எஸ் இ-யில் சற்று அதிகரித்து 940 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 960 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 900 ரூபாயாகும்.
இதே பி.எஸ் .இ-ல் சற்று அதிகரித்து 941.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய குறைந்தபட்ச விலையாக 891 ரூபாயினையும் தொட்டுள்ளது. இதே இன்றைய அதிகபட்ச விலையான 946 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 1015 ரூபாயாகவும், இதே 52 வார குறைந்தபட்ச விலையாக 34.50 ரூபாயாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications