இந்திய பங்கு சந்தையில் கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கம் என்பது இருந்து வருகின்றது. இதன் காரணமாக மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனத்தின் சந்தை மூலதனம் என்பது தற்போது சந்தையில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் செல் ஆப் நிலவி வரும் நிலையில், என்.எஸ்.இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு என்பது 5 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களின் சந்தை மூலதனம் டிசம்பர் 2022ல் 84 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த மார்ச் 13, 2023ல் 79 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
ஏற்றம் காணலாம்
நிஃப்டி மிட்கேப் 150 மற்றும் நிஃப்டி ஸ்மால் கேப் 250 குறியீடுகள் முறையே இந்த காலகட்டத்தில் 4.29% மற்றும் 5.89% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
இது குறித்து சந்தை நிபுணர் bt-க்கு அளித்த பேட்டியில், குறியீடுகள் 2 - 3% சரிவினைக் கண்டிருக்கலாம். அடுத்த சில மாதங்களில், காலாண்டுகளில், சந்தையானது மீண்டும் ஏற்றத்திற்கு திரும்பலாம். மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் ஏற்றத்தினை காணலாம் என தெரிவித்துள்ளார்.
முதலீடுகள் வெளியேற்றம்
நிஃப்டி 100 மற்றும் நிஃப்டி 50 உள்ளிட்ட குறியீடுகள் முறையே 6.90% மற்றும் 5.25% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளன. இது மார்ச் 13 வரையிலான காலகட்டம் என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், அன்னிய முதலீடானது அதிகரித்துள்ளது.
மீடியம் டெர்மில் எப்படி?
மீடியம் டெர்மில் சந்தையானது ஏற்ற இறக்கத்தினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பாராத விதமாக மிக மோசமாக கூட இருக்கலாம். தொடர்ந்து உள்நாட்டு பொருளாதார காரணிகளுக்கு மத்தியில், அமெரிக்க மத்திய வங்கியானது மீண்டும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்தையானது சரிவினைக் காணலாம்.
பரிந்துரை
தற்போதைய சந்தை சூழலை கருத்தில் கொண்டு, ஆட்டோமொபைல், டெலிகாம், எப்.எம்.சி.ஜி மற்றும் தனியார் வங்கிகளில் ஜீரோவை முதலீடு செய்யுமாறு கூறியுள்ளார். எனினும் மாருதி சுசூகி இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டைட்டன் உள்ளிட்ட பங்குகளை போர்ட்போலியோவில் சேர்க்கலாம் என நிபுணர் பரிந்துரை செய்துள்ளார்.
பெரும் சரிவு
மறுபுறம் என்.எஸ்.இயில் பட்டியலிடப்பட்ட 100 நிறுவனங்களின் சந்தை மூலதனம் என்பது 195 லட்சம் கோடியில் இருந்து, 176 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதில் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியினை கண்டுள்ளன. குறிப்பாக அதானி டோட்டல் கேஸ், அதானி எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் 10.76 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பினை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரையில் சரிவினைக் கண்டுள்ளது.
இதே மற்ற நிபுணர்களும் இந்த போக்கு இன்னும் சில காலத்திற்கு தொடரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.


Click it and Unblock the Notifications