பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களில் பலரும் பலவிதங்களில் வர்த்தகம் செய்வர். ஆனால் இவற்றில் மிகப் பிரபலமானது லாங் டெர்ம் டிரேங்க். ஏனெனில் இதில் ரிஸ்க்கும் குறைவு. லாபமும் அதிகம்.
அதெல்லாம் சரி, லாங் டெர்ம் டிரேங்க் என்றால் என்ன? இதனால் உண்மையில் டிரேடர்கள் லாபத்தில் உள்ளனரா? வாருங்கள் பார்க்கலாம்,.
லாங் டெர்ம் டிரேங்க் என்பது ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்கி விட்டு பின்னர், அதனை 6 மாதமோ அல்லது 1 வருடமோ கழித்து விற்பனை செய்வது தான். அதனை வாங்கிய பின்னர் அன்றே விற்பனை செய்வது தான்.
ஒலெக்ட்ரா க்ரீன்டெக் பங்கு விலை
இப்படி நீண்டகால நோக்கில் லாபம் கொடுத்த ஒரு பங்கு ஒலெக்ட்ரா க்ரீன்டெக். இந்த நிறுவனத்தின் பங்கு, ஒரு வருடத்தில் 1,000% வருமானம் கொடுத்துள்ளது. இந்த பங்கின் விலையானது நவம்பர் 11, 2020 அன்று, 62.55 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது இன்று 716.40 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆக பி.எஸ்.இ-யில் 1,045% ஏற்றத்தில் காணப்படுகிறது.
முதலீடு வருமானம்
1 வருடத்திற்கு முன்பு இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தோமானால், இன்று அதன் மதிப்பு 11 லட்சம் ரூபாய்க்கு மேல். இந்த ஒரு வருட காலக்கட்டத்தில் சென்செக்ஸ் 37.39% தான் ஏற்றம் கண்டுள்ளது. மிட் கேப் ஃபண்டான ஒலெக்ட்ரா க்ரீன்டெக் இன்று 4.91% அதிகரித்து, அதன் ஆல் டைம் உச்சமான 716.4 ரூபாயாக அதிகரித்துளது. இது கடந்த அமர்வில் பி.எஸ்.இயில் 682.90 ரூபாயாக முடிவுற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய ஆர்டர்
கடந்த 2 நாட்களில் மட்டும் இந்த மிட் கேப் பங்கின் விலையானது கிட்டதட்ட 10% அதிகரித்துள்ளது. இது இந்த நிறுவனம் 100 மின்சார பஸ்களுக்கான 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் வந்த நிலையில், இந்த பங்கின் விலையானது ஏற்றம் கண்டுள்ளது.
டெக்னிக்கலாக என்ன நிலை?
ஒலெக்ட்ரா க்ரீன்டெக் பங்கு விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த பங்கின் விலையானது 426% அதிகரித்துள்ளது. இதே கடந்த ஒரு மாதத்தில் 36% ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 13.26% ஏற்றம் கண்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications