ரூ.7 டூ 1005: ரூ.1 லட்சம் 1 கோடியான பங்கு.. என்ன நிறுவனம் அது.. உங்க கிட்ட இருக்கா?

நீடித்த நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ப்ளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனம் நீண்டகால நோக்கில் பார்க்கும்போது பல மடங்கு லாபம் கொடுத்துள்ளது.

மிட் கேப் நிறுவனமான இதன் சந்தை மதிப்பு 9679.55 கோடி ரூபாயாகும். இந்தியாவின் வர்த்தக பிரிட்ஜிகள் மற்றும் ஏசி விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.

ப்ளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் 7500 விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது. இது தவிர 900க்கும் மேற்பட்ட இடங்களில் 1172 சர்வீஸ் பாயிண்டுகளையும் கொண்டுள்ளது. இது பிரிட்ஜ் மற்றும் ஏசிகள் மற்றும் வாட்டர் பியூரிபையர்கள் என பலவற்றையும் விற்பனை செய்து வருகின்றது.

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று என் எஸ் இ-யில் 1.89% அதிகரித்து, 1009.70 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 1013.95 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 978.05 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1225 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 758 ரூபாயாகும்.

இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலையானது 1.75% அதிகரித்து, 1005 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 1013.05 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 978.75 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 1224.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 740.05 ரூபாயாகும்.

முதலீட்டின் நிலை

முதலீட்டின் நிலை

இப்பங்கினில் 21 வருடங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 1.39 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கும். இப்பங்கின் விலையானது ஜூலை 6, 2021ல் 7.21 ரூபாயாக இருந்தது. இன்று 1013 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது. இந்த மல்டிபேக்கர் பாங்கானது சுமார் 13,840% லாபத்தினை கொடுத்துள்ளது.

5 ஆண்டு நிலவரம்?

5 ஆண்டு நிலவரம்?

கடந்த 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலையானது 49.38% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஒராண்டில் 20.19% ஏற்றம் கண்டுள்ளது. எனினும் கடந்த 6 மாதங்களில் இப்பங்கின் விலையானது, 2.35% சரிவினைக் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் இப்பங்கானது, 1.01% சரவினைக் கண்டுள்ளது. இதே கடந்த 1 மாதத்தில் இப்பங்கின் விலையானது 4.71% ஏற்றத்தினை கண்டுள்ளது. இதே கடந்த 5 அமர்வுகளில் இப்பங்கானது 3.47% ஏற்றம் கண்டுள்ளது.

காலாண்டு முடிவு எப்படி?

காலாண்டு முடிவு எப்படி?

ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் நிகர லாபம் எதிர்பார்ப்பினையும் தாண்டி, அதிகரித்துள்ளது. இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த லாபமாஅந்து 192% அதிகரித்து, 123 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வருவாய் விகிதமானது 87% அதிகரித்து, 1970 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இனி எப்படியிருக்கலாம்

இனி எப்படியிருக்கலாம்

இப்பங்கின் விலையானது 5 நாள் , 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் மேலாக இருந்து வருகின்றது. இதன் இலக்கு விலை அதிகரித்திருந்தாலும் இதன் வலுவான செயல்பாட்டின் காரணமாக இன்னும் இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+