பங்குச்சந்தை முதலீடுகளை பொருத்தவரை நாம் முறையாக ஆய்வு செய்து நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் மட்டுமே நல்ல வருமானத்தை பார்க்க முடியும். இவ்வாறு சரியான நிறுவனங்களை தேர்வு செய்ய ஒவ்வொருவரும் ஒரு ஃபார்முலா வைத்திருப்பார்கள். அப்படி குறிப்பிட்ட ஒரு ஃபார்முலா கொண்டு இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் அதிக லாபம் தரும் வாய்ப்புள்ளதாக இரண்டு மல்டிபேக்கர் பங்குகளை ஃபைனான்சியஸ் எக்ஸ்பிரஸ் தளம் வெளியிட்டுள்ளது.
கடன் இல்லை, லாபம் உண்டு: கடன் இல்லை அதிக லாபம் என்ற ஃபார்முலாவுக்குள் இந்திய பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இரண்டு நிறுவனங்கள் மட்டுமே வந்துள்ளன என அந்த செய்தி குறிப்பிடுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் கடனை பூஜ்ஜியமாக்கி, 40 சதவீததுக்கும் மேலும் மூலதனத்தில் லாபம் பெற்ற நிறுவனங்களாக இவை இரண்டும் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களை profit masters என அழைக்கின்றனர்.

சில்சார் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Shilchar Technologies Ltd) : 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் மின்னணு மற்றும் தொலைதொடர்பு, எரிசக்தி துறை சம்பந்தப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 6086 கோடி ரூபாய். இந்நிறுவன பங்கின் 52 வார கால உச்சமதிப்பு 6,125 ரூபாய். ஜூலை 3ஆம் தேதி இதன் ஒரு பங்கு மதிப்பு 5,350 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
இந்தியாவில் மின் சம்பந்தப்பட்ட கட்டமைப்புகளை உற்பத்தி செய்வதில் இந்த நிறுவனம் நிபுணத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் ROCE (return on capital employed) 47 சதவீதமாகவும் , இந்த ஆண்டு செய்ய 71 சதவீதமாகவும் உள்ளது. அதாவது இந்த நிறுவனம் செய்யும் முதலீட்டில் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் இந்த நிறுவனம் 71 ரூபாயை லாபமாக பெறுகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த துறையில் சராசரியாக செய்யபப்டும் 100 ரூபாய் மூலதனத்திற்கு 19 ரூபாய் தான் லாபமாக கிடைக்கிறது.
எனவே ஒட்டுமொத்த துறையை விட அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக இது இருக்கிறது. 2020 ஆம் நிதி ஆண்டு இந்த நிறுவனத்தின் விற்பனை மதிப்பு 71 கோடி ரூபாயாக தான் இருந்தது அது 2024 ஆம் ஆண்டில் 623 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது. அதேபோல இந்த நிறுவனத்தின் வருமானம் என்பது 2020 ஆம் ஆண்டு 3 கோடியாக இருந்து 2025-ஆம் ஆண்டில் 185 கோடி என உயர்ந்திருக்கிறது. லாபம் என பார்க்கும்போது 2020 ஆம் ஆண்டு 2 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக பெற்று வந்த இந்த நிறுவனம் 2025 ஆம் நிதியாண்டில் அதனை 147 கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறது.
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 37 ரூபாய் தான், அதுவே 2025 ஆம் ஆண்டில் ஜூலை 3ஆம் தேதி 5,350 ரூபாயாக இருக்கிறது . ஐந்தாண்டுகளில் இந்த பங்கு மதிப்பு 14,300 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டு இதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது மதிப்பு 1.43 கோடியாக இருந்திருக்கும் . கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் தங்களுடைய கடனை படிப்படியாக குறைத்து தற்போது கடனே இல்லாத நிறுவனமாக மாறி இருக்கிறது. அது தவிர இந்த நிறுவனம் ஒரு பங்குக்கு 12.5 ரூபாய் ஈவுத் தொகையாகவும் வழங்குகிறது.

அமிக் ஃபோர்ஜிங் லிமிடெட் ( Amic Forging Ltd ) : கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமிக் ஃபோர்ஜிங் ஸ்டீல் ஃபோர்ஜிங் மற்றும் பெரிய இயந்திரங்களுக்கான பாகங்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாக செயல்படுகிறது. 1886 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்டிருக்க கூடிய இந்த நிறுவனம் தான் செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய் முதலீட்டுக்கும் 48 ரூபாயை லாபமாக பெறுகிறது. இந்த துறையின் லாப விகிதமே 19% தான் .
2020 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் விற்பனை மதிப்பு 13 கோடி ரூபாயாக இருந்தது 2025 ஆம் ஆண்டில் 121 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் 2020 ஆம் ஆண்டு 1 கோடி ரூபாயிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 28 கோடி ரூபாய் என அதிகரித்து இருக்கிறது. நிறுவனத்தின் லாபத்தை பொறுத்த வரை 2020 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் எந்த லாபமும் பெறவில்லை நஷ்டமும் அடையவில்லை. ஆனால் 2025 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 36 கோடி ரூபாய்.
5 ஆண்டுகளில் நிறுவனத்தின் லாபம் 142 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் தான் இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது . அப்போதி அதன் ஒரு பங்கு மதிப்பு 277 ரூபாய் தற்போது இதன் பங்கு மதிப்பு 1,652 ரூபாய். கடந்த 3 ஆண்டுகளில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 593 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 2023 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது அதன் மதிப்பு 6 லட்சம் ரூபாயாக உயர்ந்திருக்கும்.
இந்நிறுவன பங்கில் பிரமோட்டர்களே 58 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றனர் மீதமுள்ள பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் வசம் உள்ளது. இந்நிறுவன பங்கின்52 வார கால உச்ச மதிப்பு 1809 ரூபாய் ஆகும். இந்நிறுவனமும் தனது கடன் அளவை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications