கடந்த சில வாரங்களாகவே சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தின் மத்தியில், பங்குகள் கடும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இதற்கிடையில் சர்வதேச தரகு நிறுவனமான ஜெஃப்ரிஸ் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கின் தரத்தினை உயர்த்தியுள்ளது. இதனை வாங்கலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
பங்கு பரிந்துரை?
இந்தியாவினை பொறுத்த வரையில் தொலைத் தொடர்பு துறையில் கடுமையான போட்டி என்பது நிலவி வரும் நிலையில், டெலிகாம் துறையில் உள்ள பல நிறுவனங்கள் காணாமல் போயுள்ளன. ஆக தற்போதுள்ள சில நிறுவனங்களே என்ன பிரச்சனை வந்தாலும், சந்தையில் நிலைத்து நிற்கின்றது எனலாம். ஆக அந்த வகையில் பார்தி ஏர்டெல் நிறுவனமும் இன்றும் தொலைத் தொடர்பு துறையில் சிறந்த ஒரு போட்டியாளராக வலம் வந்து கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தினை தான் ஜெஃப்ரிஸ் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
அர்பு அதிகரிக்கலாம்
முன்னதாக இந்த நிறுவனத்தின் இலக்கு விலையினை 850 ரூபாயாக நிர்ணயம் செய்திருந்த நிலையில், தற்போது அதன் இலக்கினை 900 ரூபாயாக திருத்தம் செய்துள்ளது. தொடர்ந்து 4ஜி சேவையில் முக்கிய பங்கு வகித்து வரும் ஏர்டெல் நிறுவனம், தொடர்ந்து சில முறைகள் கட்டண அதிகரிப்பினையும் செய்தது. இதன் காரணமாக இதன் அர்பு விகிதமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு வளர்ச்சி?
வோடபோன் நிறுவனத்தின் பின்னடைவானது ஏர்டெல் நிறுவனத்திற்கு சாதகமான ஒன்றாகவும் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 13% அர்பு விகிதம் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்டகால நோக்கில் வளர்ச்சி
ஜெஃப்ரிஸ் அதன் வருவாயினை குறைத்துள்ளது. அதன் எபிட்டா விகிதமானது 1 - 4% வரையில் குறையலாம் எனவும் கணித்துள்ளது. எனினும் அதன் ஒருங்கிணைந்த வருவாய் விகிதமானது 23 - 25ம் நிதியாண்டில் 16 - 17% வளர்ச்சி இருக்கலாம் என கணித்துள்ளது.
மார்ச் 2025 வரையில் எந்த கட்டண உயர்வும் இல்லாவிட்டால் அதன் மதிப்பானது 710 ரூபாயாக இருக்கலாம். இதே கட்டண அதிகரிப்பானது இருக்கும்பட்சத்தில் 1020 ரூபாயாகவும் இருக்கலாம் என கணித்துள்ளது.
வாங்கி போடலாம்?
எப்படியிருப்பினும் பார்தி எர்டெல் பங்கினை வாங்கி வைக்கலாம். இதன் இலக்கு விலை 900 ரூபாய் என கணித்துள்ளது. தாமதமான கட்டண உயர்வு என்பது பிரச்சனையை ஏற்படுத்த கூடும் எனவும் தரகு நிறுவனம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து 4ஜி சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் ஏர்டெல், மொத்த சந்தையில் 305 பங்கு வகிக்கிறது. எனினும் 4ஜி சந்தை பிரிவில் 2022ம் இரண்டாம் பாதியில் 60% அளவுக்கு வளர்ச்சி கண்டது.
மொபைல் வணிகம்
இந்தியாவின் மொபைல் வணிகமானது 8.5 மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக 2025ம் நிதியாண்டு வரையில் கட்டண அதிகரிப்பே இல்லையென்றால், இதன் இலக்கு விலை 710 ரூபாயாக இருக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது. ஆக இதுவும் முதலீட்டாளர்களால் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.
பங்கு விலை நிலவரம்?
கடந்த வெள்ளிக்கிழமையன்று இப்பங்கின் விலையானது 773.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்சம் என் எஸ் இ-யில் 860.55 ரூபாயாகவும், இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை என்பது 628.75 ரூபாயாகவும் உள்ளது. இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் 52 வார உச்சம் 877.10 ரூபாயாகவும், 52 வார குறைந்தபட்ச விலையாக 629.05 ரூபாயாக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பி எஸ் இ-யில் பங்கு விலையானது சற்று குறைந்து, 773.70 ரூபாயாகவும் முடிவடைந்திருந்தது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications