ரூ.9 டூ ரூ.3721.. கடனில்லா பார்மா நிறுவனத்தின் சூப்பர் ஏற்றம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

டிவிஸ் லேபாரட்டரீஸ் லிமிடெட் நிறுவனம் லார்ஜ் கேப் துறையை சேர்ந்த ஒரு நிறுவனமாகும். இது ஒரு பார்மா நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 98,972 கோடி ரூபாயாக உள்ளது. இது முன்னணி ஆக்டிவ் பார்மா (API) மூலதனத்தினை வழங்கும் ஒரு நிறுவனமாகும்.

இது சர்வதேச அளவில் 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது.

ஏபிஐ உற்பத்தியாளர்

ஏபிஐ உற்பத்தியாளர்

ஹைத்ராபாத்தினை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம் சர்வதேச அளவில் முன்னணி API உற்பத்தியாளராகும். இது கடனில்லா ஒரு பார்மா நிறுவனமாகும். இதுவே முதலீட்டாளர்களை கவர ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 19 ஆண்டுகளுக்கு முன்பு இப்பங்கினில் முதலீடு செய்திருந்தால், இன்று நீங்கள் கோடீஸ்வரர் தான்.

பங்கு வரலாறு

பங்கு வரலாறு

பார்மா துறையை சேர்ந்த இந்த நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமையன்று 3721.10 ரூபாயாக ஒரு பங்குக்கு முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வின் முடிவினைக் காட்டிலும் 5.75% ஆக சரிவினைக் கண்டுள்ளது.

கடந்த 19 வருடங்களுக்கு பிறகு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 4.13 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கோடீஸ்வரர்

கோடீஸ்வரர்

இது அதன் ஆல்டைம் உச்சத்தில் இருந்து பார்க்கும் போது 41,245.56% ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், 4.13 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கு விலையானது ஆகஸ்ட் 18, 2017ல் 635.20 ரூபாயாக உச்சம் தொட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 485.82% ஏற்றம் கண்டுள்ளது.

ஓராண்டு நிலவரம்?

ஓராண்டு நிலவரம்?

கடந்த ஒரு ஆண்டில் இப்பங்கின் விலையானது 24.04% ஆக ஏற்றம் கண்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, 20% சரிவினைக் கண்டுள்ளது.

என் எஸ் இ பங்கு விலையானது 5425.10 ரூபாயாக அக்டோபர் 2021ல் உச்சம் தொட்டுள்ளது. இதன் 52 வார குறைந்த விலை 3365.55 ரூபாயாக தொட்டது. தற்போதைய நிலவரப்படி, உச்சத்தில் இருந்து 31.40% சரிவினைக் கண்டுள்ளது. இதே 52 வார குறைந்த விலையில் இருந்து 10.56% மேலாகவும் காணப்படுகிறது.

வருவாய்

வருவாய்

டிவிஎஸ் லேபாரட்டரீஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் முதல் காலாண்டில் 2434 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1997 கோடி ரூபாயாக இருந்தது. இது ஒருங்கிணைந்த அடிப்படையில் 17.32% அதிகரித்துள்ளது. இதே வரிக்கு முந்தைய லாபம் 851 கோடி ரூபாயாக இருந்தது. இதே கடந்த ஆண்டில் 814 கோடி ரூபாயாக இருந்தது.

செலவினம் அதிகரிப்பு

செலவினம் அதிகரிப்பு

இதே வரிக்கு பிந்தைய லாபம் 702 கோடி ரூபாயாகவும், இது கடந்த ஆண்டில் 557 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 26.03% அதிகரித்துள்ளது.

தரகு நிறுவனம் முதல் காலாண்டில் செலவினங்கள் அதிகம் இருந்தாலும், வரி விகிதம் என்பது குறைவாகவே உள்ளது. இது இரு இலக்கில் வளர்ச்சி காண காரணமாக அமைந்துள்ளது.

வாங்கலாம்

வாங்கலாம்

எனினும் இது இலக்கினை காட்டிலும் குறைவாகவே வந்துள்ளது. எனினும் ஏற்கனவே இப்பங்கினை வாங்கியிருப்பவர்கள் அப்படியே வைத்திருக்கலாம். நீண்டகால நோக்கில் வாங்கி வைக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+