சன்மித் இன்ஃப்ரா பங்கானது பங்கு சந்தையில் உள்ள மல்டிபேக்கர் பங்குகளில் ஒன்றாகும். ஸ்மால் கேப் பங்கான இதன் சந்தை மதிப்பு 1240 கோடி ரூபாயாகும். இந்த பங்கு நீண்டகால நோக்கில் லாபகரமான ஒரு பங்காக உள்ளது.
கிட்டதட்ட 4 ஆண்டுகளில் இப்பங்கானது நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு லாபகரமான ஒன்றாக மாறியுள்ளது.
இதன் பங்கு விலை 1.31 ரூபாயில் இருந்து , 78.75 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
பங்கு வரலாறு?
கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலையானது 8% ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஆறு மாத்தில் இப்பங்கின் விலையானது 42 ரூபாயில் இருந்து 78.75 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டதிட்டதில் சுமார் 90% ஏற்றம் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் 160% லாபம் கொடுத்துள்ளது. இதே கடந்த 1 வருடத்தில் இப்பங்கின் விலையானது முதலீட்டாளர்களின் பணத்தினை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
5900% ஏற்றம்
இதே கடந்த 4 ஆண்டுகளில் இப்பங்கி விலையானது 1.31 ரூபாயில் இருந்து, 78.75 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 5900% வருமானம் கொடுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு வேற லெவல் எனலாம்.
முதலீட்டின் நிலை என்ன?
ஒரு மாத்திற்கு முன்பு இப்பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் மதிப்பு 1.08 லட்சம் ரூபாயாகும். இதே ஆறு மாதங்களுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பி 11.90 லட்சம் ரூபாயாகும். இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு, 2.60 லட்சம் ரூபாயாகும். இதே 4 ஆண்டுகளுக்கு முன்பு இப்பங்கினில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 60 லட்சம் ரூபாயாகும்.
டெக்னிக்கலாக எப்படியிருக்கு?
டெக்னிக்கலாக இந்த பங்கின் விலையானது டெக்னிக்கலாக 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கும் மேலாக காணப்படுகின்றது. கடந்த 1 மாதத்தில் இப்பங்கினில் வாம்யூம் என்பது கணிசமான உச்சத்தினை எட்டியுள்ளது.
அதிகரிக்கலாம்
இந்த நிறுவனத்தின் முகமதிப்பு 1 ரூபாயாகும். இந்த நிறுவனமத்திற்கான எதிர்காலம் என்பது சிறப்பாக உள்ளது. ஆக நீண்டகால நோக்கில் 7 - 8% ஏற்றம் காணலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் 71.77% பங்கானது புரோமோட்டர்கள் வசமும், 28.23%மும் பொது மக்கள் வசமும் உள்ளது.
இன்றைய பங்கு நிலவரம்?
பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 2.22% குறைந்து, 77 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 80.95 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 75.10 ரூபாயாகவும் உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 85.70 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 25.54 ரூபாயாகவும் உள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications