ஒவ்வொரு முறை டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் போதும், அது கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களின் சமையலறை பட்ஜெட் சிதறுவதை குறிக்கிறது. இன்று இந்திய ரூபாய் வரலாறு காணாத அளவுக்கு ஒரு டாலருக்கு நிகராக 93.12 ரூபாய் என்ற அதல பாதாளத்திற்கு சரிந்துள்ளது. இது ஏதோ பங்குச்சந்தை நிலவரம் என்று வெறுமனே கடந்து போய்விட முடியாது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் வரை, இந்த சரிவு ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தின் கனவுகளையும், சேமிப்பையும் கேள்வி குறியாக்கியுள்ளது. ஏற்கனவே விலைவாசி உயர்வால் தத்தளித்து கொண்டிருக்கும் சாமானிய மக்களுக்கு, ரூபாயின் இந்த வீழ்ச்சி ஒரு இடியைப் போன்றது. எதெல்லாம் விலை ஏறப்போகிறது? உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை இது எப்படி பதம் பார்க்கப்போகிறது? இந்த நிதி நெருக்கடியில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் இந்திய ருபாயின் மதிப்பானது, இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றங்கள், எனர்ஜி சப்ளையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை என பல காரணிகளுக்கு மத்தியில் இந்தியாவின் பணவீக்கம் என்னவாகுமோ என்ற அச்சமானது ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த சூழலில் தான் இந்திய ரூபாயின் மதிப்பானது அதல பாதாளம் நோக்கி பாய்ந்துள்ளது.
கடந்த வர்த்தக தினத்தில் 92.63 ரூபாய் என்ற குறைந்த பட்ச நிலையை எட்டியிருந்த ரூபாய், இன்று டாலருக்கு எதிரான 93.12 ரூபாயாக வரலாறு காணாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலையானது கடந்த வியாழக்கிழமை அன்று கிட்டத்தட்ட பேரலுக்கு 120 டாலர்களை நெருங்கியது. இது ஈரான் வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஏற்றம் கண்டது. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் இந்தியா உட்பட பலவும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன. தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழக்கம்போல செயல்பட கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது. இந்த போக்கானது இன்னும் சிறிது காலத்திற்கு நீட்டிக்கலாம் என்ற நிலையே காணப்படுகிறது.
ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி செய்யப்படும், கச்சா எண்ணெயில் இருந்து, அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும். ஏற்கனவே சப்ளை பிரச்சனையால் விலை ஏற்றம் கண்டும் வரும் எண்ணெய், ரூபாய் சரிவால் மேற்கொண்டு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழலுக்கு இந்தியா தள்ளப்படலாம். இதனால் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கலாம். இது சங்கிலித் தொடராக காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்துக்கும் வழிவகுக்கலாம்.
ரூபாய் மதிப்பைத் தக்கவைக்க இந்திய ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள டாலர்களை சந்தையில் விற்கும். அப்படி செய்தால் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக குறையும். இது நாட்டின் பொருளாதார பலத்தையும் குறைக்கலாம்.
அதோடு வெளிநாட்டுக் கல்வி பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், தங்கள் கல்வி கட்டணம் மற்றும் தங்கும் செலவுகளுக்கு இப்போது கூடுதல் ரூபாயை செலவிட வேண்டியிருக்கும். இது நடுத்தர குடும்பங்களுக்கு பெரிய நிதிச் சுமையாகும். இதேபோன்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு உள்ளவர்களுக்கு விமான டிக்கெட் முதல் ஹோட்டல் வரை அனைத்தும் விலை கூட வாய்ப்புள்ளது.
மேலும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் கார்களில் உள்ள பல மின்னணு உதிரிபாகங்கள் என பலவும் வெளிநாடுகளில் இருந்து தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. ரூபாய் மதிப்பு சரிவால் இது சார்ந்த நிறுவனங்களின் செலவும் அதிகரிக்கும். அது விலையேற்றத்தை ஊக்குவிக்கலாம். கடைசியில் அதுவும் நுகர்வோருக்கு பாரமாக அமையும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பை விட இறக்குமதி அதிகமாக இருக்கும். நாம் வாங்கும் பொருட்கள் விலை கூடுவதால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும். இது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மந்தமாக்கும். ரூபாய் சரிவால் இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும்,வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சேவை வழங்கி டாலரில் வருமானம் ஈட்டும், IT மற்றும் சாப்ட்வேர் துறைக்கு இது லாபகரமாக அமையும். அதோடு ஜவுளி, கைவினை பொருட்கள் மற்றும் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு அதிக வருவாய் கிடைக்கும். ஆனால் பாதிப்புகள் அதிகம் என்பதும் மறுப்பதற்கில்லை.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications


