அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 44 பைசா உயர்வு..!
இந்திய சந்தையில் தற்போது இருக்கும் அதிகப்படியான வளர்ச்சி வாய்ப்புகளின் காரணமாக மார்ச் மாதத்தில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் குவிந்த வண்ணமாக உள்ளது. இதன் வாயிலாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 44 பைசா வரை உயர்ந்து 66.16 ரூபாயாக உயர்ந்துள்ளது.
நடந்த முடிந்த 5 மாநில தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவின் அதிகப்படியான வெற்றிகள், சாதகமான தொழிற்துறை உற்பத்தி அளவுகள் என அன்னிய முதலீட்டாளர்களைக் கவரும் அனைத்து விதமான அம்சங்களைம் பெற்றுள்ளது.
இதனால் எப்போதும் இல்லாத வகையில் இந்திய பங்குச்சந்தையிலும், கடன் சந்தையிலும் அன்னிய போர்போலியோ முதலீட்டாளர்கள் மார்ச் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் வரலாறு காணாத வகையில் 600 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் துவங்கியது.
இத்தகைய சாதகமான காரணங்களால் நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 44 பைசா உயர்ந்து 66.16 ரூபாயாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications