மத்திய கிழக்கில் வெடித்துள்ள போர் மேகங்கள், வெறும் ஏவுகணைகளாக மட்டும் சீறவில்லை. அவை இந்திய சாமானியனின் சமையலறை வரை ஊடுருவும் பொருளாதார பேரிடியாக உருவெடுத்துள்ளன. வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய ரூபாயின் (Rupee ) மதிப்பு 93.94 ரூபாய் என்ற அதலபாதாளத்திற்கு சரிந்துள்ள நிலையில், இந்தியா என்னவாகுமோ இன்னும் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் வர போகின்றனவோ என்ற அச்சம் ஒவ்வொரு வீட்டு வாசலையும் தட்டியுள்ளது.
எகிறும் கச்சா எண்ணெய் விலையால் பெட்ரோல், டீசல் விலை விண்ணை தொட போகிறதா? பாதுகாப்பான புகலிடமாக கருத்தப்படும் தங்கம் சாமானியர்களுக்கு எட்டாக்கனியாக மாறப்போகிறதா? இறக்குமதி செலவுகள் அதிகரிப்பால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு நம் பாக்கெட்டை பதம் பார்க்க போகிறதா? போர் முனையில் நடக்கும் மோதல், இந்திய சந்தையில் ஏற்படுத்தப்போகும் அந்த 5 பெரும் தாக்கங்கள் மற்றும் நாம் தப்பிக்க வழி என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று வரலாறு காணாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. இது மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மத்தியில், கச்சா எண்ணெய் விலை என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது சர்வதேச நாடுகளின் பொருளாதாரத்தை பதம் பர்க்கலாம் என்ற சூழலில், பணவீக்கம் என்ற கண்ணுக்கு தெரியா அரக்கனும் மிகப்பெரிய அளவில் உருவெடுத்து வளர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே தான் இந்திய ரூபாய் மதிப்பானது 93.94 ரூபாய் அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இது முன்னதாக கடந்த மார்ச் 20 அன்று 93.7350 ரூபாய் அளவுக்கு சரிந்திருந்த நிலையில், இன்று மீண்டும் வீழ்ச்சி கண்டுள்ளது.
தொடர்ந்த இப்போரானது தொடங்கிய நாளில் இருந்து சரிந்து வரும் ரூபாய் சுமார் 3% அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்க வழிவகுக்கும். ஏனெனில் இந்தியா தனது தேவையில் 80% அதிகமான கச்சா எண்ணெய்-ஐ இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. ரூபாய் சரிவால், இறக்குமதி செலவுகள் கடுமையாக அதிகரிக்கலாம். இது பணவீக்கத்தை தூண்டலாம். எரிபொருள் விலையானது தொடர்ந்து அதிகரித்தால், அது அத்தியாவசிய பொருட்களின் விலையையும் ஊக்குவிக்கலாம். இது நேரடியாக சாமானிய மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கலாம்.
போர்க்காலங்களில் முதலீட்டாளர்கள் வழக்கமாக பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடுகளை அதிகரிப்பார்கள். ஆக தற்போது நிலவி வரும் நெருக்கடியான சூழல் காரணமாக தொடர்ந்து தங்கத்தில் முதலீடுகள் அதிகரிக்கலாம். இது விலையையும் ஊக்குவிக்கலாம். அது மட்டும் அல்ல இறக்குமதி சார்ந்த பொருட்கள் விலையை அதிகரிக்கவும் வழிவகுக்கலாம். இருப்பினும் ஏற்றுமதியாளர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவலாம்.
BofA ஆய்வு நிறுவனமானது ரூபாய் மதிப்பானது ஜூன் 2026-க்குள் 94 ரூபாய் வரை சரிய வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது. இது போரானது அடுத்த சில வாரங்களுக்குள் முடிவுக்கு வந்தால், இதற்குள் நிற்கும். ஒரு வேளை போரானது அதையும் தாண்டி நீடித்தால் ரூபாய் மதிப்பு இன்னும் மோசமான சரிவை சந்திக்கும் என கூறியுள்ளது. ஏற்கனவே ரூபாய் மதிப்பானது கிட்டத்தட்ட 94 ரூபாயை நெருங்கிய நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஆக போரின் போக்கே இனி வரும் நாட்களில் விலைவாசியை கட்டுப்படுத்தும். அது ஏற்றமா அல்லது சரிவா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications