டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 68.05 ரூபாயாக சரிந்தது..!
நேற்று மட்டும் 11 பைசா சரிந்து 67.87 ரூபாய் என டாலருக்கு எதிராக வர்த்தகம் ஆனது குறிப்பிடத்தக்கது.
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து 68 ரூபாயைத் தொட்டது.

இரண்டு நாட்களாகத் தொடர்ந்து சரிந்த ரூபாயின் மதிப்பு இன்று 18 பைசா சரிந்து 68.05 ரூபாயாக வர்த்தகம் ஆனது. இந்திய ஈக்விட்டி சந்தைச் சரிவு மற்றும் ஐரோப்பிய சந்தையில் டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை இந்தச் சரிவுக்க காரணம் என்று கூறப்படுகின்றது.
இன்று காலை 67.85 ரூபாயாக இருந்த ரூபாயின் மதிப்பு 68.06 மற்றும் 68.06, 67.81 என வத்தகம் ஆனது.
நேற்று மட்டும் 11 பைசா சரிந்து 67.87 ரூபாய் என டாலருக்கு எதிராக வர்த்தகம் ஆனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications