அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்வு..!
டொனால்டு டிரம்ப் வெற்றி மற்றும் பெடரல் வங்கியின் நாணய கொள்கை ஆகியவை முதலீட்டாளர்களுக்கு அமெரிக்காவில் அதிக லாபத்தை அளிக்கும் சந்தையாகத் தற்போது உருவெடுத்துள்ளது.
இதனால் இந்திய சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் பெருமளவு அமெரிக்கச் சந்தையை நோக்கிய சென்று வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அதிகளவிலான டாலரை விற்பனை செய்த காரணத்தால் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் ரூபாய் மதிப்பு 10 பைசா உயர்ந்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.76 என்ற நிலையில் முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு 10 பைசா உயர்ந்து 68.67 ரூபாய் ரூபாயாக உயர்ந்துள்ளது.



Click it and Unblock the Notifications