அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.16 ஆகச் சரிவு..!
இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 0.02 சதவீதம் சரிவை தழுவியுள்ளது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.14 ரூபாயாக இருந்த நிலையில் இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் 68.13 ரூபாயாக வர்த்தகம் துவங்கி மதியம் 2 மணியளவில் 0.02 சதவீத சரிந்து 68.16 ஆகக் குறைந்தது.
2016ஆம் ஆண்டில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 சதவீதம் வரை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 மாத சரிவை அடைந்ததுள்ளது.



Click it and Unblock the Notifications