சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு நேற்று இரண்டு வார உயர்வை சந்தித்துள்ள இருந்தது. ஆதே நேரம் ரீடெயில் சந்தையில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 16வது நாளாக உயர்ந்துள்ளது.
இன்று பிறபகல் 12:32 மணியளவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்து 68.39 ரூபாயாக உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் உச்சபட்சமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ரூபாயாக உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை
சர்வதேச அளவில் WTI கச்சா எண்ணெய் 2.83 டாலர்கள் என 4.17 சதவீதம் சரிந்து 67.88 டாலர் ஒரு பேரல் என விற்கப்படுகிறது. அதே நேரம் இந்தியா அதிகளவில் பிரெண்ட் கச்சா என்ணெயினைத் தான் இறக்குமதி செய்து வருகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 2.35 டாலர் என 3.07 சதவீதம் சரிந்து 76.44 டாலர் ஒரு பேரல் என விற்கப்பட்டு வருகிறது.
எப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை குறையும்?
பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 75 டாலராகக் குறையும் வரை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையினைக் குறைக்க வாய்ப்பில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
தினசரி விலை மாற்றம்
கச்சா எண்ணெய் விலை குறையும் போது எண்ணெய் நிறுவனங்கள் ஏன் இப்படி விலையினைக் குறைக்காமல் உள்ளன, இதனை ஏன் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளன என்று மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
அத்தியாவசிய பொருட்கள் விலை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் விலை எல்லாம் தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் பணவீக்கம் பெரிய அளவில் உயரும் என்றும் கூறப்படுகிறது.
ஜிடிபி
2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டிற்கான ஜிடிபி தரவு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்பட இருக்கிறது. சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஜிடிபி-க்களும் சரிந்து காணப்படுகின்றனர்.
இன்றை பெட்ரோல் விலை நிலவரம்
சென்னையில் திங்கட்கிழமை பெட்ரோல் விலை 81.26 ரூபாய் லிட்டர் என்று இருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 81.43 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது டெல்லியில் 79.43 ரூபாய், கொல்கத்தாவில் 81.06 ரூபாய், மும்பையில் 86.24 ரூபாய் என ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று டீசல் ஒரு லிட்டர் 73.18 ரூபாய் என்றும், டெல்லியில் 69.31 ரூபாய், கொல்கத்தாவில் 71.86 ரூபாய், மும்பையில் 73.79 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications