புதன்கிழமை காலை சந்தை நிலவரத்தின்படி வர்த்தகம் துவங்கிய உடன் 12 காசுகள் உயர்ந்து 68.21 ரூபாயாக உள்ளது. இந்த உயர்வுக்குக் காரணம் அமெரிக்க டாலரின் தேவை குறைந்துள்ளதே என்று கூறப்படுகின்றது.
இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிவை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது. நேற்று மாலை வரலாறு காணாத அதிகபட்ச சரிவான அமெர்க்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 68.33 ரூபாயாக வர்த்தகம் ஆனது.

புதன்கிழமை காலை சந்தை நிலவரத்தின்படி வர்த்தகம் துவங்கிய உடன் 12 காசுகள் உயர்ந்து 68.21 ரூபாயாக உள்ளது. இந்த உயர்வுக்குக் காரணம் அமெரிக்க டாலரின் தேவை குறைந்துள்ளதே என்று கூறப்படுகின்றது.
ஆனால் நேற்று காலை வர்த்தகம் துவங்கிய போது 68.12 ரூபாயாக இருந்த டாலருக்கு எதிரான மதிப்பு ஃபோரெக்ஸ் சந்தை ஆட்டம் கண்டதில் 68.22 ரூபாயாகச் சரிந்தது.
பின்னர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் 68.3450 ரூபாயாகச் சரிந்து பின்னர் 68.33 ரூபாயாக முடிந்தது. 2016 டிசம்பர் 1-ம் தேதி அன்று 68.34 ரூபாயாக முடிந்ததே அதிகபட்ச சரிவாக இருந்தது.

கச்சா எண்ணெய்
2015 ஜூலை மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய்யின் விலை 2017-ம் ஆண்டு அதிகபட்ச விலை உயர்வை எட்டியுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் 2 சதவீதம் உயர்ந்த கச்சா எண்ணெய் பேரல் 58.37 அமெரிக்கா டாலர்களாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றது. இது மேலும் 60 டாலர் வரை எட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Click it and Unblock the Notifications