பங்குச்சந்தை சரிவு போதாது என்று ரூபாய் மதிப்பும் சரிவு. இந்திய ரூபாய் மதிப்பு வரலாரு காணாத சரிவை அடைய என்ன காரணம்.
அமெரிக்கச் சந்தையில் வட்டி உயர்விற்கான சூழ்நிலைகள் மிகவும் சாதகமாக உள்ள நிலையில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் அமெரிக்கக் கடன் மற்றும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால் புதன்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கப் பங்குச்சந்தை குறியீடான டாவ் ஜோன்ஸ் வரலாறு காணாத வகையில் 19,000 புள்ளிகளை முதல் முறையாகத் தாண்டியது.

இந்நிலையில் வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்திய நாணய சந்தையில் அமெகரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.85 என்ற வரலாறு காணாத சரிவை அடைந்துள்ளது.
இதற்கு முன் ஆகஸ்ட் 2013ஆம் வருடம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.5 ரூபாயாகக் குறைந்து வரலாற்றில் இடம்பிடித்த நிலையில் தற்போதும் மேலும் சரிவைடைந்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்புக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் டொனால்டு டிடம்ப் வெற்றியும், அவரது உலக நாடுகளுடன் இருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கமும்
இரண்டாவது டரம்ப் வெற்றியால் ஏற்கனவே இந்திய சந்தையில் இருக்கும் முதலீட்டு அளவுகள் வெளியேறி வரும் நிலையில் மோடியின் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை மிகப்பெரிய அளவிலான பாதிப்பை வர்த்தகச் சந்தையில் உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications