வரலாறு காணாத சரிவை ரூபாய் மதிப்பு சந்திக்க ஐந்து காரணங்கள்..!

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி நவம்பர் 8 ஆம் தேதி அறிவித்ததினால் 4 சதவீதம் வரை ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

வியாழக்கிழமை(24/11/2016) வர்த்தக நேரத்தில் இந்திய நாணய சந்தை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.85 என்ற வரலாறு காணாத சரிவை அடைந்துள்ளது.

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி நவம்பர் 8 ஆம் தேதி அறிவித்ததினால் 4 சதவீதம் வரை ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பலவீனம் இன்னும் சில நாட்கள் இப்படியே இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே சமயம் இந்த அழுத்தம் பணப் புழக்கம் அதிகமாகும் வரை பெரும் அளவு குறைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

நாம் இங்கு இந்திய ரூபாய் மதிப்பு எதனால் குறைந்தது என்பதற்கான முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.

வெளிநாட்டு பணம் வெளியேற்றம்

வெளிநாட்டு பணம் வெளியேற்றம்

நவம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவின் 10 வருடப் பத்திரங்களின் முதலீடு 60 அடிப்படை புள்ளிகள் வரை குறைந்துள்ளது.

அதே நேரம் அமெரிக்காவின் 10 வருடப் பத்திரங்களின் முதலீடு 2.35 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவே வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் இருந்து குறைவதற்கான காரணம் ஆகும்.

டாலரின் 100 புள்ளிகளுக்கும் அதிகமாகவே நல்ல வலுவான நிலையில் வர்த்தகம் ஆகி வரும் நிலையில் இந்திய சந்தை மந்தமாகவே இருக்கும்.

 

பொங்கியெழுந்த டாலர்

பொங்கியெழுந்த டாலர்

அமெரிக்காவின் தரவின்படி புதன் கிழமை 13 வருட உயர்வை டாலர் மதிப்புப் பெற்று நல்ல நிலையில் உள்ளது. இதனால் இந்திய ரூபாய், இந்தோனேசியா ரூபாய், தாய் பட், பிலிப்பைன்ஸ் பேசோ மற்றும் மலேசியாவின் ரிங்கிட் நாணயங்கள் எதிராக நல்ல நிலையில் டாலர் மதிப்பு உள்ளது.

திரும்ப எடுத்துச் செல்ல முடியாத வெளிநாட்டு நாணயம்

திரும்ப எடுத்துச் செல்ல முடியாத வெளிநாட்டு நாணயம்

2013 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி திரும்ப எடுத்துச் செல்ல முடியாத வெளிநாட்டு நாணயமாக 29 பில்லியன் டாலர் வரை வெளியேற்றியது. இதனால் ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 68 ரூபாயை அடைந்தது. இப்போது நவம்பர் மாதம் 25 பில்லியன் வரை இது குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பணப்புழக்க அமைப்பு

பணப்புழக்க அமைப்பு

பழைய ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து மக்களின் கைகளில் பணப்புழக்கம் குறைந்தும், வங்கிகளில் உயர்ந்தும் உள்ளது. ஆனால் வங்கிகளுக்கு இடையில் குறைந்துள்ளது.

நடப்பு மதிப்பீட்டின் படி 6 லட்சம் கோடி வரை வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 12 ஆம் தேதி முதல் வங்கிகள் தினமும் சராசரியாக 80,000 கோடியை ரிவர்ஸ் ரெப்போவாக ரிசர்வ் வங்கிக்கு நவம்பர் 23 ஆம் தேதி வரை 1.2 லட்சம் கோடியை அளித்திருப்பதால் டாலர் தட்டுப்படு ஏற்பட்டு ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.

 

அமெரிக்க மத்திய வங்கி விகிதம் உயர்வு

அமெரிக்க மத்திய வங்கி விகிதம் உயர்வு

அமெரிக்க சந்தை பார்வையாளர்களைப் பொருத்தவரை 90 சதவீதம் டிசம்பர் மாதம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வளர் நாடுகளில் உள்ள பங்குகளை முடிந்த வரை முதலீட்டு நிர்வாகிகள் குறைத்துவருவதாகவும் கூறப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+